இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதித்த அனைத்துக் கட்சிக்கூட்டம்..! மஜக பங்கேற்பு..!



சென்னை.பிப்.13..,

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பாசிச கொள்கையால் நாட்டில் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க திராவிடக் கழகம் சார்பாக அனைத்து கட்சி கூட்டம் இன்று கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இட ஒதுக்கீடு குறித்து சமீபத்திய தீர்ப்பு குறித்தும், அதனால் ஏற்படும் ஐயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது, மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாசிசக் கொள்கை அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இக்கூட்டத்தில் திமுக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், SDPI, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று கருத்துக்களை பரிமாறினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
13-02-2020