நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக அரசு 6 புதிய பாலங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது . 2016-ல் புதிய ஆட்சி அமைந்து 10 மாதத்திற்குள் நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியத்திற்கு கீழ்க்கண்ட 6 இணைப்பு பாலங்கள் கிடைத்ததில் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . இதற்காக அதிமுக அரசுக்கும் , நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் , மாவட்ட அமைச்சர் O.S. மணியன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றனர் . பாலங்கள் பற்றிய விபரம் . 1. முடிகொண்டான் ஆற்றில் கீழசன்னநல்லூர் - காவாளி இணைப்பு பாலம் . 2.வடபாத்தில் கரம்பை - கூறக்களகுடி இணைப்பு பாலம் . 3.புத்தாற்றில் புறாகிராமம்-நாட்டார்மங்களம் இணைப்பு பாலம் . 4.நரமேனி ஆற்றில் சடகோபன்மூளை- கீறங்குடி இணைப்பு பாலம் . 5. ஆழியாற்றில் தென்னமரக்குடி- தாதன்கட்டளை இணைப்பு பாலம் . 6.ஆழியாற்றில் திருநாட்டாந்தோப்பு- திருமாளையம் பொய்கை இணைப்பு பாலம் . தகவல் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 19-03-2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி! நாகை MLA பங்கேற்பு!
நாகை. மார்ச்.18.,நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழக கைத்தறி துணிநூல் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் O.S. மணியன், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், திருமருகல் ஒன்றியங்களை சேர்ந்த 178 பெண்களுக்கு ரூ.86 லட்சத்து 63 ஆயிரத்து 936 மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 18.03.2017
திவிக தோழர் படுகொலை மஜக கடும் கண்டனம் …
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA விடும் அறிக்கை ) திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த தோழர் பாரூக் என்பவர் படுகொலை செய்யப்பட்டதை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது . யாருடைய கருத்தையும் ஜனநாயக வழியில் எதிர்கொள்வதே நேர்மையான அணுகுமுறையாகும் . மாறாக வன்முறையை கையில் எடுப்பது ஜனநாயக விரோத செயலாகும் . அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , தி வி க தோழர்களுக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் . இவ்விசயத்தில் உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18-03-2017
ஐந்து அம்ச கொள்கைகளை பிரதிபலிக்கும் பட்ஜெட்…
(2017-2018)-ம் ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை குறித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி,MLA வெளியிடும் அறிக்கை) 2017-2018-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை எளியவர்களின் எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது. கடந்த நிதி நிலை அறிக்கையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட நீர் ஆதார மேலாண்மை, வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கான வீட்டுவசதி, திறன் மேம்பாடு, தூய்மை தமிழ்நாடு, ஆகிய ஐந்து அம்ச திட்டக் கொள்கைகைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் பின்பற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. • வறுமை ஒழிப்பிற்காக 741.12 கோடி ஒதுக்கீடு. • தமிழ் வளர்ச்சித்துறைக்காக 48 கோடி ஒதுக்கீடு. • மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடி ஒதுக்கீடு. • நாகப்பட்டினம் உள்ளிட்ட மீன் பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்த 1105 கோடிக்கு ஒப்புதல். • அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டத்திற்காக 250 கோடி ஒதுக்கீடு. • நீர்வள ஆதாரத்துறைக்கு 4791 கோடி ஒதுக்கீடு. • பள்ளிக் கல்விக்காக 26,932 கோடியும், உயர்க் கல்விக்காக 3,680 கோடியும் ஒதுக்கீடு. • இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக 116 கோடி ஒதுக்கீடு. • மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக 466 கோடி ஒதுக்கீடு ஆகிய விஷயங்கள் பாராட்டப்படக்கூடியதாகும். அதே சமயம், சிறுபான்மை மக்களுக்காக குறிப்பிட்டு
தமிழ் மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை தேவை!மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த ஜீ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள செய்தி நாடு முழுக்க அறிவு சார் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. IIT,AIMS உள்ளிட்ட இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஃபாஸிஸமும்,ஏகாதிபத்திய போக்குகளும் தலைவிரித்தாடி வரும் நிலையில் இம்மரணமும் பல்வேறு ஐயங்களை உருவாக்கியுள்ளது. எனவே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என்றும்,மனிதாபிமான அடிப்படையில் ஜீ. முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 15_03_17 #MJK_IT_WING