​நாகை தொகுதிக்கு 6 பாலங்கள் ..!


நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக அரசு 6 புதிய பாலங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது .
 

2016-ல் புதிய ஆட்சி அமைந்து 10 மாதத்திற்குள் நாகை தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஒன்றியத்திற்கு கீழ்க்கண்ட 6 இணைப்பு பாலங்கள் கிடைத்ததில் தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 
இதற்காக அதிமுக அரசுக்கும் , நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களுக்கும் , மாவட்ட அமைச்சர் O.S. மணியன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றனர் . 

பாலங்கள் பற்றிய விபரம் . 

1. முடிகொண்டான் ஆற்றில் கீழசன்னநல்லூர் – காவாளி இணைப்பு பாலம் . 
2.வடபாத்தில் கரம்பை – கூறக்களகுடி இணைப்பு பாலம் . 
3.புத்தாற்றில் புறாகிராமம்-நாட்டார்மங்களம் இணைப்பு பாலம் .
4.நரமேனி ஆற்றில் சடகோபன்மூளை- கீறங்குடி இணைப்பு பாலம் .
5. ஆழியாற்றில் தென்னமரக்குடி- தாதன்கட்டளை இணைப்பு பாலம் . 
6.ஆழியாற்றில் திருநாட்டாந்தோப்பு- திருமாளையம் பொய்கை இணைப்பு பாலம் . 
தகவல் 
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 

19-03-2017