நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி MA.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லுரியின் சேர்மன் ஜோதிமணி ஜி.எஸ்.பிள்ளை, செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கெடுத்தனர். கல்லூரி நிர்வாகமும், பேராசிரயர்களும், மாணவ மாணவிகளும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து சிறப்பித்துதந்தது அணைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகை மாவட்டம் 30.04.2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் நாகை MLA அவர்களுடன் சந்திப்பு!
நாகை.ஏப்.18., நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொண்ட MLA அவர்கள் மீனவர்களின் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 18.04.17
முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,80,000/- நிதி ஒதுக்கிய நாகை எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு!
நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி.MA., அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர், கிராமவாசிகள், மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நாகப்பட்டினம் 18.04.2017
14வது நிதிக்குழு மானியபணிகள் நாகை MLA அதிகாரிகளுடன் கலந்தாய்வு…
நாகை. ஏப்.15., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் தாலுக்காவில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் குறித்து BDO மற்றும் ஊராட்சி செயலாளர்கள் , அதிகாரிகளுடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA ஆய்வு மேற்கொண்டார் . 14-வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்பட்ட 60 லட்சம் ரூபாய்க்கான 219 பணிகளில் 190 பணிகளை விரைந்து முடித்ததற்காக அதிகாரிகளை பாராட்டினார் . அதுபோல ஒருங்கிணைந்து ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியில் ஒதுக்கப்பட்ட 22 லட்சத்தில் 16 பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது . மீதி 12 பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் . இதுதவிர திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு 2 கோடியே 19 லட்சத்தில் 117 பணிகள் புதிதாக தேவைப்படுவதாகவும் , அதை கலெக்டரிடம் பரிந்துரைக்க வேண்டும் என்றும் , வந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் , கலெக்டரிடம் பேசுவதாகவும் கூறினார் . தற்போது திருமருகலில் குடிநீர் பிரச்சனைகள் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு சீர் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 15-04-2017
கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வுடன் சந்திப்பு…
நாகை.ஏப்.13., சீர்காழி தொகுதில் உட்பட்ட கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும் ஊரில் விதி முறைக்கு எதிராக நிலத்தடிநீரை மாசுபடுத்தும் இறால் பண்ணை அமைக்க முயற்சிக்கும் ஆதிக்க சக்திகளின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனே சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசவும் கேட்டுக் கொண்டார்கள். இந்த விசயத்தை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதாகவும் வாக்குறுதி அளித்தார். M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உணர்வு பூர்வமான நடவடிக்கைக்கு ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த மஜக மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், தம்மாம் மண்டல IKP அல் கோபர் கிளை பொருளாளர் உமர் முக்தார், உஸ்மான், நாகை வடக்கு மாவட்ட மஜக செயலாளர் மாலிக் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி.