நாகை.ஏப்.13., சீர்காழி தொகுதில் உட்பட்ட கீராநல்லூர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும்,
நாகை சட்டமன்ற உறுப்பினரும்மான M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து தாங்கள் வசிக்கும்
ஊரில் விதி முறைக்கு எதிராக நிலத்தடிநீரை மாசுபடுத்தும் இறால் பண்ணை அமைக்க முயற்சிக்கும் ஆதிக்க சக்திகளின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
உடனே சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசவும் கேட்டுக் கொண்டார்கள்.
இந்த விசயத்தை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு உடனே கொண்டு செல்வதாகவும் வாக்குறுதி அளித்தார். M.தமிமுன் அன்சாரி
MLA அவர்களின் உணர்வு பூர்வமான நடவடிக்கைக்கு ஜமாத் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த மஜக மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ், தம்மாம் மண்டல IKP அல் கோபர் கிளை பொருளாளர் உமர் முக்தார், உஸ்மான், நாகை வடக்கு மாவட்ட மஜக செயலாளர் மாலிக் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி.
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
நாகை வடக்கு மாவட்டம்.
13.04.2017.