வேதை.ஜூன்.12., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் ரமலானில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நோன்பு கஞ்சியை வினியோகிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி நாகை (தெற்கு) மாவட்டம் தோப்புத்துறையில் மஜக சார்பில் பொதுமக்கள் கூடும் ஆறுமுகச்சந்தியில், இன்று நோன்பு கஞ்சி பிரத்யோகமாக காய்ச்சப்பட்டு சகோதர சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டது.பேருந்துகளில் செல்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், வாகன ஒட்டிகள் சிறுவணிகர்கள், அரசு ஊழியர்கள், என அனைவரும் அதை மகிழ்சியோடு பெற்று சென்றனர்.அதுபோல அதிகாரிகள், மருத்துவர்கள், முக்கிய பிரமுகளுக்கும் அவர்களின் வீடுகளுக்கு நோன்பு கஞ்சி கொடுத்தனுப்பப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக சமூக நல்லிணக்கம், புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வு அனைவராலும் வரவேற்க்கப்பட்டது.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_நாகை_தெற்கு_மாவட்டம்
நாகப்பட்டிணம்
நாகை ஆரியநாட்டு தெருவில் மீன்பிடி இறங்கு தள அடிகல் நாட்டு விழா! அமைச்சர், MLA, கலெக்டர் பங்கேற்ப்பு!
நாகை.ஜூன்.11., நாகப்பட்டினம் ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் கிராமத்தில் ₹1.63 லட்சம் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் மற்றும் வலைப்பின்னும் தளம் ஆகியவை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் அடிகல் நாட்டு விழா நேற்று (10.06.18) நடைப்பெற்றது. இதில் மாண்புமிகு அமைச்சர் #OS_மணியன், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் #சுரேஷ்_குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் #கோடிமாரி, #தங்க_கதிரவன், மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு கிராம மீனவ பஞ்சாயத்தார் ஏற்பாடு செய்த நன்றி கூட்டத்தில் பேசிய மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிக் கொடுத்திருப்பதாகவும், இதற்கு ஒப்புதல் வழங்கிய #முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், மீன்வளத்துறை #அமைச்சர் ஜெயக்குமார் அர்களுக்கும், கோரிக்கைக்கு துணை நின்ற அமைச்சர் O.S மணியன் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெறிவித்துக் கொள்வதாக கூறினார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம், 11/06/2018.
ஒரே மேடையில் பல்வேறு கட்சியின் தலைவர்கள்..! மஜகவின் நாகை வடக்கு இஃப்தார் நிகழ்வில் சகோதரத்துவம்..!!
சீர்காழி.ஜுன்.06., நாகை வடக்கு மாவட்டம் தைக்கால் துளசேந்திரபும் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் கிளை சார்பாக #இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 200 அடி நீளத்தில் பந்தல் போடப்பட்டு பிரமாண்ட ஏற்பாட்டுடன் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் P.V. பாரதி (#அதிமுக), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் (#திமுக), #பாமக துணைப் பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, சே.ரகுராஜ் (#விசிக), S.ஜெயராமன் ஒன்றிய செயலாளர் (அதிமுக) கமாலுதீன் (#SDPI) உள்ளிட்ட எதிரும் புதிருமான அரசியல் கட்சியின் பிரமுகர்கள், மஜகவின் அழைப்பை ஏற்று ஒரே மேடையில் கூடினர். 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் வருகை தந்து சிறப்பித்தனர். முக்கியமாக தைக்கால் ஜமாத்தினர் மொத்தமாக வருகை தந்து நிகழ்ச்சிக்கு மெறுகூட்டினர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனரும், திருமதி துர்கா அவர்களின் தம்பியுமான மருத்துவர் இராஜமூர்த்தி அவர்கள் நோன்பின் மாண்பு குறித்து சிறப்பானதொரு விளக்கவுரையாற்றினார். அவரது உரை அனைத்து மதத்தினர்களின் உள்ளத்தையும் கவரும் வகையில் இருந்து. சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி அவர்கள், துளியும் அரசியல் பேசாமல், நோன்பு குறித்தும், அது ஏற்படுத்தும் நல்ல நோக்கம் குறித்தும் உரையாற்றினார். #மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA
நாகையில் மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி..! நாகை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்..!!
நாகை. ஜூன்.09., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (2017-18) மாற்று திறனாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் (WATER BED) வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் பயணாளிகளுக்கு தண்ணீர் படுக்கைகள் வழங்கினர். இந் நிகழ்வில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 09.06.18
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பு!
நாகை.ஜுன்.04., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், மஞ்சகொல்லை ஊராட்சி பள்ளி வாசல் புதுதெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2017-18-ல் இருந்து ரூபாய் 4.80 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 03/06/2018