நவ.06., கடந்த 5\11\2016 சனிக்கிழமை மாலை வேலூர் மேற்கு மாவட்டம் வாணியம்பாடியில் மஜக சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா.தா.பாண்டியன், கர்நாடகா முஸ்லிம் முத்தாஹித் தஹ்ரிக் தலைவர் முக்தார் அஹமது, JAQH பொதுச்செயலாளர் அன்சார் ஹூசைன் பிர்தௌஸி, ஜமாத் இஸ்லாமி ஹிந்த் மாநில செயற்குழு உறுப்பினர் அதீக்வுர் ரஹ்மான், வாணியம்பாடி நகர தலைமை காஜி.சையத் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பேசினார்கள். முழுவதும் உள்ளூர் மக்களே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி.. மஜகவின் கள வலிமையை காட்டுவதாக அமைந்தது. தோழர் தா.பாண்டியன் அவர்களின் பேச்சு மோடி அரசை வெளுத்து வாங்கியது. நிறைவுரை ஆற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் பொதுசிவில் சட்டத்தை தோலுரித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் ஊர் மக்களும் பிரமுகர்களும் பொதுச்செயலாளரை சந்தித்து மஜகவின் பணிக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தகவல்: மஜக ஊடகப் பிரிவு வேலூர் மேற்கு மாவட்டம்.
Author: admin
மனிதநேய கலாச்சார பேரவையின் துபை மண்டல செயற்குழு & மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி…
நவ.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாடு வாழ் தமிழர்களின் பாசறையாக செயல்படும் #மனிதநேய_கலாச்சார_பேரவை -துபை மண்டலத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அல் பரகாவில் அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரஜாக் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய கலாச்சார பேரவையின் மார்க்க பிரிவாக செயல்படும் இஸ்லாமிய கலாச்சார பேரவை -IKP துபை மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோ: அப்துல் அஜிஸ் அவர்கள் தொழுகையின் அவசியம் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள். அதன் பின்னர் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கீழ்காணும் வகையில் புதிய நிர்வாகிகள் பட்டியலை அறிவிப்பு செய்து #மண்டல_செயலாளர் யூசுப்ஷா பேசினார். அதன் படி: #துபை_மண்டல_பொருளாளராக பசூர் இஸ்மாயில் பாபு அவர்களும் #துணைச்_செயலாளர்களாக 1.கடலங்குடி ஹர்பின் அவர்களும் 2.கட்டிமேடு ஜாஹீர் அவர்களும் 3.தோப்புத்துறை ஹம்தான் அவர்களும் 4.பண்டாரவாடை அசீப் அவர்களும் #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை(IKP) செயலாளராக லால்பேட்டை சபீக் அவர்களும் பகுதி செயலாளர்களின் முதற் பட்டியல்: 1.அல் கூஸ் பகுதி செயலாளராக காயல்பட்டினம் சபீர் அவர்களும் 2.ஹோரல் அன்ஸ் பகுதி செயலாளராக முத்துப்பேட்டை அசார் அவர்களும் 3.மம்சார் பகுதி செயலாளராக காட்டுமன்னர்குடி அஹமது அவர்களும் (செயற்குழு உறுப்பினர்களில் மாற்றம் இல்லை) செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுது. இக்கூட்டத்தின் இறுதியாக மண்டல IKP செயலாளர் #லால்பேட்டை_சபீக் நன்றி கூறினார்.எதிர்கால செயல்பாடுகள் மற்றும் புதிய சிந்தனைகள் பேசப்பட்டு கூட்டம்
சென்னை மிரண்டது! மஜக பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி!
நவ.05., நேற்று (04/11/2016) சென்னை மண்ணடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுசிவில் சட்டம் கொண்டு வரத் துடிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து "சமூக நீதிக்கான பொதுக்கூட்டம்" மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. இதில் M.தமிமுன் அன்சாரி, தொல்.திருமாவளவன், S.S.ஹாரூண் ரஷீத், டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மது, மெளலவி சம்சுதீன் நாசர் உமரி, தாவுத் மியாக் கான், அடையாறு இமாம் மெளலவி சதீதுத்தீன் பாகவி, N.A.தைமிய்யா உள்ளிட்டோர் உரையாற்றினர். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் திரண்டதால், 7 மணியளவில் பாரிமுனை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 8 மணியளவில் தம்புச்செட்டித் தெருவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். அம்பாள் பிரஸ் தொடங்கி மெட்ரோ பேலஸ் தாண்டியும் கூட்டம் நீண்டது. சாலையின் இருபுறங்களிலும் இடம் கிடைக்காமல் மக்கள் நின்றபடியே நிகழ்ச்சிகளைப் பார்த்தனர். ஜமாத்தார்கள், பெண்கள், இளைஞர்கள், பிற சமுதாய சகோதரர்கள் என கூட்டம் பன்முகத்தன்மையோடு இருந்தது. தலைவர்களின் ஆவேச, அர்த்தமுள்ள உரைகளை கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது! சென்னையில் மஜக மத்திய அரசை மிரட்டியிருக்கிறது. விரைவில் இது தமிழகம் முழுக்க பரவும்! எல்லாப் புகழும் இறைவனுக்கே! தகவல்; மஜக ஊடகப்பிரிவு(சென்னை)
சென்னை பல்கலைகழகத்தில் பொதுசிவில் சட்ட கலந்துரையாடல்!
இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய படிப்பக மையம் சார்பில் பொதுசிவில் சட்டம், மற்றும் தலாக் குறித்த கலந்துரையாடல் நடைப்பெற்றது. பல்வேறு மத நம்பிக்கையாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், இடது சாரிகள், முற்போக்காளர்கள், பெண்கள், அரசியல் தலைவர்கள் என பல களங்களிலிருந்தும் அறிவுஜீவிகளும், செயல்பாட்டார்களும் வருகை தந்திருந்தனர். பேரா. வசந்தி தேவி, பாத்திமா முசப்பர், எழுத்தாளர் சல்மா, வழக்கறிஞர் கீதா, பர்வீன் பாப்பா, ஓவியா உள்ளிட்ட பெண் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி, தாவுத் மியான்கான், T.S.S மணி, பத்திரிக்கையாளர் குமரேசன், ஆவணப்பட இயக்குனர் அன்வர், முஸ்லிம் லீக் சார்பில் நிஜாம், INTJ சார்பில் இக்பால், IFT சார்பில் சிக்கந்தர், தோழர் மணிவண்ணன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு மாறுபட்ட கருத்துகளை ஆரோக்கியமான முறையில் பரிமாறினர். ஜனநாயக களத்தில் அவரவர் பார்வையில், கோணத்தில் சிறப்பான முறையில் பேசிட சென்னை பல்கலைகழக இஸ்லாமியக் ஸ்டெடி சென்டர் சார்பில் பேரா. அப்துல் ரஹ்மான் ஏற்பாடு செய்ததை அனைவரும் பாரட்டினர்.
எங்கள் இதயங்களை உடைத்து_விடாதிர்கள்! நாமக்கல்லில் மஜக பொதுச்செயலாளர் உரை…
நாமக்கல்லில் ஷரியத் பாதுகாப்பு கமிட்டியின் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான போராட்டம் எழுச்சியுடன் நடைப்பெற்றது. இதில் பல்வேறு சமூகதலைவர்களுடன், மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, பாப்புலர் பிரண்ட் தலைவர் இஸ்மாயில், தமுமுக சார்பில் தர்மபுரி சாதிக் மற்றும் ஜமாத்துல் உலமா மாநில துணைத் தலைவர் அபுல் கலாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது.... நாம் யாருக்கும் எதிராகவும் கூடவில்லை, யாரையும் அச்சுறுத்துவதற்காக திரளவில்லை. இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்மை தன்மையையும் காப்பாற்ற கூடியுள்ளோம். ஒவ்வொறு சமூகத்திற்க்கும் மொத்தம் தனியே 300 சிவில் சட்டங்கள் உண்டு. அதில் முஸ்லிம்களுக்கு திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, வக்பு வாரியம் ஆகிய நான்கு விஷயங்களுக்கு மட்டுமே தனிச்சட்டம் உள்ளது. பிற விஷயங்களில் எல்லோருக்கும் உள்ள சட்டங்கள் முஸ்லிம்களையும் பின்பற்ற செய்கிறது. அம்பேத்கார் ஒரு பொதுவான அனைவரும் ஏற்ககூடிய சமூக அமைப்பு உருவான பிறகுதான் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றுவது குறித்து பேசியிறுக்கிறார். அரசியல் சட்டத்தின் கொள்கை விளக்க தலைப்பில் 44 வது சட்டம் பற்றி பேசுவதாக கூறிகிறார்கள். ஆனால் 37 வது பிரிவு அதுபற்றி