வேதாரண்யத்தில் மஜக இல்ல மணவிழா! IT WING மண்டல செயலாளர் அப்துல் முபீன் மண விழாவில் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பு!

ஜூன்:20.,

மஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளர் மணமகன் N.அப்துல் முபீன், அவர்களுக்கும், மணமகள் J.நிலோபர் அவர்களுக்கும் நேற்று தோப்புத் துறையில் திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

மஜக இணைப் பொதுச் செயலாளர் J.S.ரிபாயி அவர்கள் திருமண உரையாற்றினார்.

துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநிலச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நிகழ்வில் பாடகர் தேரிழந்தூர் தாஜ்தீன் அவர்கள் ‘அண்ணல் நபி பொன் முகத்தை கண்கள் தேடுதே..’ என்ற பாடலை பாடி பரவசப்படுத்தினார்.

தொடர்ந்து , மக்கள் சேவையாற்றியவர்களுக்கும், சான்றோர்களுக்கும் பாராட்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் இப்பகுதியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இரண்டு மருத்துவர்கள், மருத்துவ சேவை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அதன்படி, வேதாரண்யம் அரசு மருத்துவமனை முதுநிலை உதவி மருத்துவர் டாக்டர் N. தனசேகரன் அவர்களுக்கும், அகஸ்தியன் பள்ளி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ராஜசேகர், அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

வேதாரண்யத்தில் ‘கைத்தடி’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் தோழர்.மோகன் அவர்களுக்கும், கடந்தாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் c.நாகராஜன் அவர்களுக்கும், நீராதாரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சிங்கை. காதர் மெய்தீன், அவர்களுக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் பரிசளிக்கப்பட்டது.

நிகழ்வில் நாகை மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருப்பூண்டி சாகுல், தோப்புத்துறை மன்சூர், பொதக்குடி ஜெய்னுதீன், நாகை மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகை_மாவட்டம்
19.06.2022