மேட்டுப்பாளையத்தில்! சிறந்த இரத்ததான சேவைக்கான சான்றிதழ் பெற்ற மஜக! பாராளுமன்ற உறுப்பினர் அ.ராசா அவர்கள் சான்றிதழ் வழங்கி_பாராட்டு!

ஜூன்:20.,

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் இரத்த வங்கிக்கு, 60 லட்சம் மதிப்புள்ள ரத்த அணுக்கள் பிரிக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இரத்ததான சேவையில் ஈடுபட்ட சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அ.ராசா, அவர்கள் கலந்து கொண்டு , மனிதநேய ஜனநாயக கட்சி மருத்துவ சேவை அணிக்கு சிறந்த ரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழை மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அசார், அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மஜக மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் இளைஞரணி மாவட்ட செயலாளர் ராஜா முகமது, மாவட்ட பொருளாளர் சதாம், துணைச் செயலாளர் ஜாஃபர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
20.06.2022