(மஜக பொதுச்செயலாளர் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) பொதுசிவில் சட்ட சர்ச்சைகளும், விவசாயிகள் தற்கொலைகளும், போபால் என்கவுண்டர் சர்ச்சைகளும், புதிய கல்வி கொள்கை குறித்த விமர்சனங்களும், நாட்டை உலுக்கி இருக்கும் நிலையில் அதையெல்லாம் திசை மாற்றும் வகையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியின் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு, கருப்பு பணத்தை ஒழிக்கிறோம் என வண்ணமயமான காரணங்களை கூறியிறுக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் தலா 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற மோடியின் தேர்தல் வாக்குறுதி இப்போது மறக்கடிக்கப்பட்டுறிக்கிறது. நாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் 10 சதவீதம் பேர்தான் எனும் நிலையில், அவர்கள் அதை சொத்துக்களாகவும், தங்கம் போன்ற மதிப்புமிக்க பொருட்களாகவும்தான் வைத்திருப்பார்கள். எல்லோரும் 500,1000 ரூபாய் நோட்டுகளாகதான் வைத்திருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்? பிரதமர் மோடியின் அறிவிப்பால் நடுத்தர மக்கள் மிகவும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். குறைந்த பட்சம் 1 வார கால அவகாசமாவது கொடுத்திருக்கலாம் என்ற மக்களின் குரல்களை நாடெங்கும் கேட்க முடிகிறது. திருமணம், புதுவீடு என பல கனவுகளோடு வீட்டில் பணத்தை சேமித்து
Author: admin
பொதுசிவில் சட்டத்திர்க்கு எதிராக நாகையில் பேரெழுச்சி!
கடந்த (08.11.16) அன்று நாகப்பட்டினத்தில் ஜமாத்துல் உலமா முன்முயற்ச்சியில் பொதுசிவில் சட்டத்திர்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரனி MLA, முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரஹ்மான் EX.MP, தேசிய லீக் சார்பில் நிஜாமுதின் EX.MLA, JAQH சார்பில் முஹைதின் பக்ரி, தேசிய லீக் கட்சி சார்பில் தடா ரஹீம், sdpi கட்சி சார்பில் நிஜாம் மைதீன், திராவிட கழகம் சார்பில் அன்பழகன், மமக சார்பில் ஜபருல்லா, ஜமாத்துல் உலமா சார்பில் முகமது ரிழா பாஜீல் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; மஜக ஊடகப் பிரிவு, நாகை தெற்கு.
ஜனநாயக சக்திகளோடு இணைந்து போராடுவோம்! மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் சூளுரை!
நவ.07., இன்று 125 ஜமாத்துகள் மதுரையில் ஒன்றாக இணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும், அறிஞர்களும் உரையாற்றினர். இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி பேசினார். அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு... நேற்று கோவையில் ஐக்கிய ஜமாத்தும், திருச்சியில் TNTJ வும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டியுள்ளனர். இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மக்களை திரட்டியுள்ளது. கட்சி வேறுபாடுகளை, கருத்து வேறுபாடுகளை களைந்து கூடியிருக்கிறோம். நாம் கூடியிருப்பது யாருக்கும் எதிராக அல்ல. இந்தியாவின் ஜனநாயகத்தை; பன்முகத்தன்மையை; ஒற்றுமையை காக்க திரண்டிருக்கிறோம். முதலில் முஸ்லிம்களை சீண்டுகிறார்கள். பிறகு வன்கொடுமை சட்டத்தை நீக்குவார்கள். பிறகு இட ஒதுக்கீட்டை பறிப்பார்கள். பிறகு மொழியுரிமைகளை பறிப்பார்கள். எனவேதான் நாம் அனைத்து மக்களையும் அழைக்கிறோம். முஸ்லிம்கள் முதலில் களத்திற்க்கு வந்திருக்கிறார்கள். காரணம், அவர்கள் அநீதியை எதிர்ப்பதில் வரலாறு முழுவதும் அவர்கள்தான் முன்னிலையில் நிற்கிறார்கள். இந்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்ப்பட்டோர், இதர சிறுபான்மையினர் நம்மோடு இருக்கிறார்கள். மோடிக்கு 31% சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள். 69% மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். உத்திரப்பிரதேச தேர்தலுக்காக மோடி நாடகம் ஆடுகிறார். அவர்களால் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர
மஜக பொள்ளாச்சி நகர புதிய அலுவலகம் திறப்பு… மாநில பொருளாளர் SS.ஹாருண் ரஷீது அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்
இறைவனின் திருப்பெயரால்... இன்று 7.11.16 திங்கட்கிழமை மாலை மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர அலுவலக திறப்புவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில பொருளாளர் SS.ஹாருண்ரஷீது M.com அவர்கள் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார் மாநிலசெயலாளர் AK.சுல்தான்அமீர் அவர்கள் மஜக கொடி யேற்றி வைத்தார்கள் மாநிலதுணைசெயலாளர் A.அப்துல்பஷீர் அவர்கள் மக்கள் சேவை மையத்தை துவங்கி வைத்தார்கள் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் மாவட்ட துணை செயலாளர் TMS.அப்பாஸ் மற்றும் நகர செயலாளர் ஜெமீஷா மற்றும் அனைத்து மாவட்ட அணி மற்றும் அனைத்து பகுதி கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள் தகவல் மஜக ஊடக பிரிவு கோவை மாநகர்மாவட்டம்