நவ.07., இன்று 125 ஜமாத்துகள் மதுரையில் ஒன்றாக இணைந்து பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும், அறிஞர்களும் உரையாற்றினர்.
இதில் மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி பேசினார்.
அவரது பேச்சின் சுருக்கம் பின்வருமாறு…
நேற்று கோவையில் ஐக்கிய ஜமாத்தும், திருச்சியில் TNTJ வும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மக்களை திரட்டியுள்ளனர். இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மக்களை திரட்டியுள்ளது. கட்சி வேறுபாடுகளை, கருத்து வேறுபாடுகளை களைந்து கூடியிருக்கிறோம்.
நாம் கூடியிருப்பது யாருக்கும் எதிராக அல்ல. இந்தியாவின் ஜனநாயகத்தை; பன்முகத்தன்மையை; ஒற்றுமையை காக்க திரண்டிருக்கிறோம்.
முதலில் முஸ்லிம்களை சீண்டுகிறார்கள். பிறகு வன்கொடுமை சட்டத்தை நீக்குவார்கள். பிறகு
இட ஒதுக்கீட்டை பறிப்பார்கள். பிறகு மொழியுரிமைகளை பறிப்பார்கள்.
எனவேதான் நாம் அனைத்து மக்களையும் அழைக்கிறோம். முஸ்லிம்கள் முதலில் களத்திற்க்கு வந்திருக்கிறார்கள். காரணம், அவர்கள் அநீதியை எதிர்ப்பதில் வரலாறு முழுவதும் அவர்கள்தான் முன்னிலையில் நிற்கிறார்கள்.
இந்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்ப்பட்டோர், இதர சிறுபான்மையினர் நம்மோடு இருக்கிறார்கள். மோடிக்கு 31% சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளார்கள்.
69% மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.
உத்திரப்பிரதேச தேர்தலுக்காக மோடி நாடகம் ஆடுகிறார். அவர்களால் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர முடியாது.
இந்த கூட்டத்தை அடக்கிவிடலாம் என நினைக்காதீர்கள். இது பிர்அவுனை, நம்ரூதை எதிர் கொண்ட கூட்டம். சோவியத்தால் செசன்யாவை அடக்க முடியவில்லை. அமெரிக்காவால் உலகமெங்கும் நம் எழுச்சியை அடக்க முடியவில்லை. யூத சக்திகளால் நமது சக்தியை அடக்க முடியவில்லை.
நாங்கள் ஜனநாயக ரீதியாக அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராடுவோம். இந்தியா எங்கள் தாய்நாடு-இஸ்லாம் எங்கள் வழிப்பாடு என்று பயணிப்போம்.
இவ்வாறு மஜக பொதுச்செயலாளர்
M. தமிமுன் அன்சாரி MLA, பேசினார்.
தகவல்;
மஜக ஊடகப் பிரிவு
மதுரை.