You are here

அமைச்சர் KN.நேரு அவர்களுடன் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது சந்திப்பு..!!

சென்னை.மே.12., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக நகரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இடத்தேர்வு செய்து அடிக்கல் நாட்டியுள்ளனர்.

புதிய பேருந்து நிலையத்திற்கான இடத்தேர்வை எதிர்த்து அனைத்து கட்சிகள் மற்றும், அமைப்புகள் சார்பாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப் பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டக் குழுவினர் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் தலைமையில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து பழைய பேருந்து நிலையத்தையே விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையத்தை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நான் நேரில் வந்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து பின்னர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தொடங்குவதாகவும் அதுவரை தற்போதைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார். அமைச்சர் அவர்களுடன் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி அவர்களும் உடன் இருந்தனர்.

இச்சந்திப்பில் புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு தலைவரும், மஜக மாநில துணைச் செயலாளருமான முஹம்மது சைபுல்லாஹ், குப்பை சீனி முஹம்மது, துறைமுகம் சிக்கந்தர், அஸ்கர், அம்ஜத், ஜூல்ஃபிகார் அலி, சுல்த்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
12.05.2022

Top