
வேலூர்., மே.11. வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
மஜக மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான SG.அப்சர் சையத் அவர்களும் பங்கேற்றார்.
இதில் கட்சியின் வளர்ச்சி பணிகள், புதிய கிளைகளை கட்டமைத்தல், வேலூர் மாநகரில் விரைவில் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குதல் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. பிறகு அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்களின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முஹம்மது யாஸீன், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஜாகிர் உசேன், சையத் உசேன், கஸ்பா ஏஜாஸ், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், இளைஞரணி செயலாளர் அமீன், இளைஞரணி துணை செயலாளர் சாதிக், ஹயாத், ஹைதர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
10.05.2022