விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் K.பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாவட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது என்றும், பரவலாக கட்சிக் கொடியேற்று நிகழ்வுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட செயலாளர் K.பாஷா மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் KSM.பக்ருதீன் ஆகியோருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் R. முகமது அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.பகுருதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் R.சதாம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் R.அஸ்மத்துல்லா, தொழிற்சங்க மாவட்ட செயலாளர் M.மன்சூர் அலி, நகர நிர்வாகிகள் A.ஹாஜி முஹம்மது, M.முஹம்மது அப்பாஸ், S.பாரூக், அன்சாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.