நீலகிரி மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா…

மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்டம் கூடலூரில் புதிய மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் இன்று (12.03.2023) நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஜாவித் ஜாஃபர் அவர்கள் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வாசு, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஹனீபா, cpi மாவட்ட செயலாளர் கனி, திமுக கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்தி, மாவட்ட துணை செயலாளர் வர்மா, மேற்கு மாவட்ட துணை செயலாளர் மஜீத் அமீநி, ஜோஸ், நிசார் பாபு, ரபீக், இளைஞர் அணி செயலாளர் ரஷீத் மற்றும் கூடலூர் நகர செயலாளர் இஸ்மாயில் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளானோர் பங்கேற்றனர்.