You are here

MKP கத்தார் பெருநாள் ஒன்று கூடல்…

மே:12., மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் நோன்பு பெருநாள் சந்திப்பு நிகழ்வு மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர் மஜக ஓமன் மண்டல தலைமையக பொருப்பாளர் உத்தமபாளையம் முஹம்மது உவைஸ், அவர்கள் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் மண்டல துணைச் செயலாளர் பரங்கிப்பேட்டை ரஜ்ஜாக் நீதி போதனை வழங்க நிகழ்ச்சி ஆரம்பமானது, இதனை தொடர்ந்து மண்டல செயலாளர் ஆயங்குடி யாசின், அவர்கள் கடந்த மாதம் நடைபெற்ற “இதயங்களை இனைப்போம்” மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி மிக சிறப்பான முறையில் நடத்தப்பட்டதை பாராட்டி நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

மேலும் பேரவையின் வளர்ச்சி, கிளைகள் மறுசீரமைப்பு மற்றும் புதிய கிளைகள் உருவாக்குவது குறித்து பொருப்பாளர்களை நியமித்து நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது :

1.பலஸ்தீன மக்களின் துயரங்களை வெளிப்படுத்திய அல் ஜெசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஷெரீன் அபு அவர்கள் ஜியோனிஸ ஆக்ரமிப்பு படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்,
இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கிறோம்.

2. சிறுமி ஆசிஃபா வழக்கில் போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த சகோதரி தீபிகா சிங் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வாயிலாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

3.மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டல தலைமையக பொறுப்பாளராக பொறுப்பேற்று இருக்கும் கீழக்கரை முஹம்மது ஹுசைன் அவர்களுக்கும் ஓமன் மண்டல தலைமையக பொறுப்பாளராக பொறுப்பேற்று இருக்கும் உத்தமபாளையம் முஹம்மது உவைஸ் அவர்களுக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

4.புதியதாக கிளைகள் அமைப்பது மற்றும் மறுசீரமைப்பு செய்து பொருப்பாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. முதற்கட்டமாக சனையா மற்றும் தோஹா மாநகரங்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் மண்டல துனைச் செயலாளர் மஞ்கக்கொல்லை முஹம்மது ஃபர்மானுல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கருப்பூர் உபைஸ் மற்றும் சனையா மாநகர செயளாலர் கடலங்குடி முஹம்மது ஹர்ஃபின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக மண்டல துணைச் செயலாளர் சிதம்பரம் நூர் முஹம்மது நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

தகவல்;

#தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_WING
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#கத்தார்_மண்டலம்
12/05/2022

Top