ஜன.17., சென்னை கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடைபெறும் மாணவர் போராட்டத்தில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் தலைமையில் மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பைசல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கைது செய்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய், மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டுமென மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் தெரிவித்துள்ளார். தகவல் : மாணவர் இந்தியா ஊடகப்பிரிவு
Author: admin
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கலத்தில் மஜக…
ஜன.17., அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்று வரும் மக்கள் எழுச்சி போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) சார்பில் மாநில கொள்கைபரப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி நேரில் சென்றார். அவருடன் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா மாவட்ட துணைசெயலாளர்கள் வழக்கறிஞர் ஜமாலுதீன், பரூக், விவசாய அணி செயலாளர் சசிகுமார் மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் உள்ளிட்ட மஜகவினர் சென்றனர். போராட்டம் நடத்தும் முன்னணி செயல் வீரர்களுடன் கலந்துரையாடிவிட்டு போராட்டம் அமைதி வழியில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவல்துறை இப்பிரச்சினையை மென்மையாக கையால வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT_wing) மதுரை வடக்கு, தெற்கு. 17_01_2017
கும்பகோணத்தில் மஜக தஞ்சை (வடக்கு) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…
கும்பகோணம் டவுன் நாடார்கள் திருமண மண்டபத்தில் தஞ்சை வடக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் நீதிபோதனை செய்தார், குடந்தை நகர செயலாளர் நிஜாம் மைதீன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாசீன், முகம்மது சேக்தாவூது, அணி செயலாளர்கள் சேக் முகம்மது அப்துல்லாஹ், வஜீர் அலி , சிராஜீதின், முகம்மது தஃபீக், ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹீம், இப்ராஹீம்ஷா முன்னிலை வகித்தார்கள். மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது , மாநில செயலாளர் ராசுதீன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், நன்றியுரை மாவட்ட து.செயலாளர் முகமது யாசின் நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, தஞ்சை(வ) மாவட்டம்
மஜக மாநில பொருளாளர் நாகை மாவட்டம் வருகை..
மனிதநேய ஜனநாயகக் கட்சி யின் மாநில பொருளாளர். எஸ்.எஸ்.ஹாருன்ரசீத்.M.com.அவர்கள் நாகை மாவட்டம் தோப்புத்துறை வருகை புரிந்தார்கள். துபாய் மண்டலத்தின். ஆற்றல் மிக்க செயல்வீரர் தோப்புத்துறை ஜின்னா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து அவர் இல்லம் சென்று நலம் விசாரித்தார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தோப்புதுரை. ஷேக் அப்துல்லாஹ் மற்றும் பகுதி நிர்வாகிகள் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி நாகை மாவட்டம் 16_01_2017
அய்யம்பேட்டை வழுத்தூரில் மஜக கொடி ஏற்றுதல்!
ஜன.16., தஞ்சை (வடக்கு) அய்யம்பேட்டை & வழுத்தூர் பகுதிகளில் 15-1-2017 மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் M தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றினார்கள். உடன் மாநில செயலாளர் H ராசுதீன், மாநில வர்த்தக அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் முகமது மஹ்ரூப், மாவட்ட செயலாளர் காதர் பாட்சா, பாபநாசம் ஒன்றிய செயலாளர் முகமது இப்ராகிம் உள்ளிட்ட மஜக சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். தகவல்: மஜக_தகவல் தொழில்நுட்ப அணி(IT wing) தஞ்சை வடக்கு மாவட்டம் 16_01_17