கும்பகோணம் டவுன் நாடார்கள் திருமண மண்டபத்தில் தஞ்சை வடக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் காதர் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் நீதிபோதனை செய்தார், குடந்தை நகர செயலாளர் நிஜாம் மைதீன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாசீன், முகம்மது சேக்தாவூது, அணி செயலாளர்கள் சேக் முகம்மது அப்துல்லாஹ், வஜீர் அலி , சிராஜீதின், முகம்மது தஃபீக், ஒன்றிய செயலாளர்கள் முகம்மது இப்ராஹீம், இப்ராஹீம்ஷா முன்னிலை வகித்தார்கள்.
மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது , மாநில செயலாளர் ராசுதீன், மாநில வர்த்தகர் அணி செயலாளர் யூசுப் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், நன்றியுரை மாவட்ட து.செயலாளர் முகமது யாசின் நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, தஞ்சை(வ) மாவட்டம்