தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் சமூக ஆர்வலரும்,புருனை தொழிலதிபருமான D.M.ஜபருல்லாஹ் அவர்களால் கட்டப்பட்டிருக்கும் ‘அஞ்சுமன் அறிவகம்’ என்ற பிரம்மாண்ட நூலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் CMN சலீம், ஆளூர் ஷானவாஸ் ஆகியோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முஸ்லீம் லீக் தலைவர் பேரா.காதர் மொய்தீன், மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அமைச்சர் துரைக்கண்ணு, முஸ்லீம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி, முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லாஹ், அக்பர் அலி, மெளலவி.முகம்மது கான் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரபல தொழில் அதிபர்களும், சமூக ஆர்வலர்களுமான ஒயிட்ஹவுஸ் பாரி, நொபைல் மரைன். சாகுல் ஹமீது, யஹ்யா உள்ளிட்ட உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.
விழாவிற்கு வருகை தந்திருந்த VIP-கள் அனைவரும் பொதுச்செயலாளரை சந்தித்து மஜகவின் பணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மிகச்சரியாக அரசியலை மஜக கையாள்வதாக பாராட்டினர்.
சென்னைக்கு வெளியே சமுதாய மக்களால் கட்டப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான நூலகம் என இது வர்ணிக்கப்படுகிறது. சாமானியர்கள் மட்டுமின்றி ஆய்வு மாணவர்களும் பயன்படும் வகையில் இந்நூலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.பெண்களுக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கணினி வசதி, நகல் எடுக்க ஜெராக்ஸ் மெஷின் வசதிகளும் உண்டு.
சகோதரர் D.M.ஜபருல்லாஹ் அவர்களின் முயற்சியை பாராட்டுகிறோம்.
தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT wing)
தஞ்சை வடக்கு மாவட்டம்
16_01_17