வாழ்வுரிமை மாநாட்டில் நீதியரசர் சச்சார், கௌரி லங்கேஷ், சிறுமி ஆசிபா, ரோஹித் வெமுலா போன்றோருக்கு மரியாதை….

இன்று பிப்.29, கோவையில் நடைபெறும் மஜகவின் வாழ்வுரிமை மாநாடு பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

மாநாடு நடைபெறும் கொடிசியா திடலுக்கு காந்திஜி அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் கடும் குளிரில் உயிர் துறந்த குழந்தை ஜஹானாராவின் பெயர் மாநாட்டு மேடைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

சச்சார் கமிட்டியின் தலைவராக இருந்து இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நீதியரசர் சச்சார் அவர்களின் பெயர் பிரதான நுழைவாயிலுக்கும், சங்பரிவார் ஆதரவு பயங்கரவாத சூழ்ச்சிக்கு பலியான மராட்டிய DGP மாவீரன் ஹேமந்த் கர்கரேவின் பெயர் மற்றொரு நுழைவாயிலுக்கும் சூட்டப்பட்டிருக்கிறது.

பெண்கள் நுழைவாயிலுக்கு, ஃபாஸிஸ்ட்டுகளால் காஷ்மீரில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா வின் பெயரும், கண்காட்சி பகுதிக்கு ரோஹித் வெமுலாவின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

அது போல் சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு பலியான பிரபல முற்போக்கு எழுத்தாளர் கெளரி லங்கேஷ் அவர்களின் பெயர் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டிருக்கிறது.

காலம் சென்ற கோவை மஜக வின் நிர்வாகி ஜெமிஷா அவர்களின் பெயரும் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டிருக்கிறது.

வாழ்வுரிமை மாநாட்டில் தலைவர்களையும், தியாகிகளையும் மஜக சிறப்பு செய்திருக்கிறது.

இது மஜகவின் முற்போக்கு அணுகுமுறைகளையும், பன்முக அரசியல் பார்வைகளையும் உணர்த்துவதாக இருக்கிறது.

ஆம்.
மறப்பது மக்களின் இயல்பு.

அதை நினைவூட்டிக் கொண்டேயிருப்பது நமது கடமை