நாகூரில் நிலக்கரி மாசு பரவல்… மார்க் துறைமுக அதிகாரியிடம் தமிமுன் அன்சாரி MLA புகார்!

நாகூரையொட்டி காரைக்காலில் செயல்படும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யல்படுகிறது. அதனால் எழும் தூசுகளால் நாகூர், வாஞ்சூர் பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது காற்று தெற்கு நோக்கி வீசுவதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் புகார் கூறினர்.

இன்று காலை மார்க் துறைமுக அதிகாரி ரெட்டியை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு பேசிய தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது கண்டனத்தை தெரிவித்து உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.