ஜல்லிக்கட்டுக்காக போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!

M.தமிமுன் அன்சாரி, M.கருணாஸ்,
உ.தனியரசு கூட்டு அறிக்கை!

ஜல்லிக்கட்டை சட்டப்பூர்வமாக நடத்திட வேண்டும் என்ற ஆவலில் தமிழ்நாடு எங்கும் தன்னெழுச்சியாக கடந்த 10 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவுற்ற நிலையிலும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள் எனில், இந்த உணர்வுகளை மத்திய பஜக அரசு புரிந்துக் கொள்ளாமலிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், உடனடியாக மத்திய பஜக அரசு அவசர சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் மக்களின் உணர்வுகளை மதித்து, காவல்துறையினர் அவர்கள் மீது கெடுபிடிகளை காட்ட வேண்டாமென்றும், தடியடி போன்ற சம்பவங்கள் நிகழாமல் மென்மையாக இப்பிரச்சனையை கையாள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

M.தமிமுன் அன்சாரி MLA
M.கருணாஸ் MLA
உ.தனியரசு MLA
17/01/2017
(மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை,தமிழக கொங்கு இளைஞர் பேரவை)