You are here

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கலத்தில் மஜக…

image

ஜன.17., அலங்கா நல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்று வரும் மக்கள் எழுச்சி போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி(MJK) சார்பில் மாநில கொள்கைபரப்பு செயலாளர் மன்னை செல்லச்சாமி  நேரில் சென்றார். அவருடன் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா மாவட்ட துணைசெயலாளர்கள் வழக்கறிஞர் ஜமாலுதீன், பரூக், விவசாய அணி செயலாளர் சசிகுமார் மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் உள்ளிட்ட மஜகவினர் சென்றனர்.

போராட்டம் நடத்தும் முன்னணி செயல் வீரர்களுடன் கலந்துரையாடிவிட்டு போராட்டம் அமைதி வழியில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவல்துறை இப்பிரச்சினையை மென்மையாக கையால வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT_wing)
மதுரை வடக்கு, தெற்கு.
17_01_2017

Top