நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் ஏனங்குடியில் மாவட்ட செயலாளர் H.முன்சி யூசுப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ‘மக்களுடன் மஜக’ என்ற இரு மாத செயல் திட்டப் பணிகளை மாவட்டம் முழுவதும் முன் எடுப்பது குறித்தும், மக்கள் கோரிக்கைகளை வகைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் J.சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் கண்ணுவாப்பா (எ) சாகுல் ஹமீது, மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் ஏனங்குடி நிசாத், மாவட்ட நிர்வாகிகள் பேபி ஷாப் பகுருதீன், முரளி, முத்து, திருமருகல் ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், மஞ்சை சதாம், பாவா, மாலிக், சபீப், யாசின், சதாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.