கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் உத்தனபள்ளி ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் சேவைகளால் ஈர்க்கப்பட்டு தமுமுக, மமக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி தலைமை செயற்குழு உறுப்பினர் ஓசூர் நவ்ஷாத் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர்..
மேலும் அந்த கிளையில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்து கொடியேற்று விழா நடத்துவது மற்றும் “மக்களுடன் மஜக 2023” திட்டத்தை முன்னெடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் மஜக மாவட்ட துணை செயலாளர் சர்தார், ஓசூர் மாநகர செயலாளர் முஹம்மத் உமர், அன்சர், பொருளாளர் அப்துல் வஹாப் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.