தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அப்துல்லா தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கலந்துரையாடினார்.
‘மக்களுடன் மஜக’ என்ற இரு மாத செயல் திட்டப் பணிகளை ஒன்றியம் மற்றும் தொகுதிவாரியாக முன் எடுப்பது குறித்தும், மக்கள் கோரிக்கைகளை வகைப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.
இதில் மாநில துணைச் செயலாளர் அகமது கபீர் அவர்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.
எதிர்வரும் டிசம்பர் 31 அன்று மாவட்ட செயற்குழு நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.