மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் கானத்தூரில் நேற்று (18.12.2022) நடைப்பெற்றது.
மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாஹிர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி மற்றும் மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் மஜக” பணியை மாவட்ட பகுதிகளில் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம், கூடுவாஞ்சேரி, அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாலவாக்கம் காதர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கண்டோன்மன்ட் H.அப்துல் சமது, ECR, N. அப்துல் சமது, மாவட்ட இளைஞரணி செயலாளர் R.பைசுல்லா, மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் A. அப்துல் சமது, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேக் மீரான், மற்றும் ஆலந்தூர் சலீம், ஆலந்தூர் பகுதி செயலாளர் T. கபீர், ஆலந்தூர் பகுதி பொருளாளர் பஷீர் மற்றும் ECR அப்துல் ரஷீது உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.