மக்களுடன் மஜக..!! ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம்…!!

மக்களுடன் மஜக என்ற செயல் திட்டத்துடன் 2023 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் எங்கும் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி நிகழ்ச்சிகள் வடிவமைக்கபட்டுள்ளது.

இதனை முன்னிட்டு மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்களும், செயல்வீரர் கூட்டங்களும், மாவட்ட செயற்குழுக்களும் நடைபெற தொடங்கி இருக்கிறது.

இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாவட்ட மஜக ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் முகவை நசீர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.

தொகுதி மற்றும் ஒன்றிய வாரியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி ஆய்வு மேற்கொள்வது என்றும், அதனை மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வது என்றும் தேவைபடும் இடங்களில் போராட்டங்களை முன்னெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்விரு மாதங்களில் புதிய கிளைகளை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்துவது, புதிய கொடி கம்பக்களை அமைப்பது, ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவது என்றும் தீர்மானிக்க பட்டது.

இந்நிகழ்வில் துணைப்பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன், மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம், மாவட்ட பொருப்புக்குழு உறுப்பினர்கள் மீரான், ஹாஜா ரமலான், விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.