ஜன.26., உலகிலுள்ள நாடுகளில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக நமது இந்திய திருநாடு விளங்குகிறது. பல்வேறு இனம், மதம், மொழிகளை அடிப்படையாக கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை உறுதி ஏற்று நடக்கும் நமது நாட்டின் மக்கள் பல்வேறு தீய சக்திகளுக்கு இடம் அளிக்காமல் தீவிரவாதம், மதவாத சக்திகளை அடியோடு வேறறுக்கும் தன்மை கொண்ட மக்கள் தொடர்ந்து இன்னமும் பாடுபடக்கூடிய வகையில் சகோதர உணர்வோடு செயல்பட்டு நமது நாட்டின் *68 வது குடியரசு தினம்* கொண்டாட போகும் நாம் மகிழ்ச்சியோடு கொண்டாட *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. மனிதநேய கலாச்சார பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி தகவல் தொழில்நுட்ப அணி, 55278478 - 55260018 - 60338005 E-mail: mjkkuwait@gmail.com
Author: admin
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குடியரசு தின விழா.
ஜன.26., நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தேசிய கொடியை நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றி வைத்தார் . அதன் பிறகு உரையாற்றி , உறுதி மொழி முழக்கங்களை எழுப்பி நிறைவாக இனிப்புகளை வழங்கினார் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 26-01-2017
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சிகள்…நாகை MLA பங்கேற்பு .!
ஜன.26., இன்று காலை 8 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றல் , விருது வழங்குதல் , நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியன நடைபெற்றது . இதில் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்றனர் . தகவல் : நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 26-01-2017
இளையான்குடியில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோ.மவ்லா முகம்மது நாசர் அவர்கள் தேசிய கொடியேற்றும் நிகழ்வு…
ஜன.25., இந்திய நாட்டின் 68-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவங்கங்கை மாவட்டம் இளையான்குடியில் நாளை 26-ஜனவரி அன்று மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோ.மவ்லா முகம்மது நாசர் அவர்கள் தேசிய கொடி ஏற்றி சிறப்பிப்பார்கள். நேரம் : காலை 8.00 மணி, இடம் ; கண்மாய்கரை' இளையான்குடி. அணைவரும் வருக தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சிவகங்கை மாவட்டம்
குடியரசு தின வாழ்த்துக்கள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை) இந்தியாவின் 68 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக நாடுகளில் நாமும் இடம் பெற்றிருக்கின்றோம் என்பது மன நிறைவு தருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை அடிப்படையில் நம்நாடு அனைவரையும் இணைத்திருக்கிறது. மதவெறி, சாதி வெறி, வன்முறைகள், பயங்கரவாதம் ஆகியவற்றை கடந்து நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இந்நாளில் மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நாட்டின் முன்னேற்றத்திற்க்குபாடுபட உறுதி ஏற்ப்போம். நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது குடியரசு தின வாழ்த்துக்கள். இவண், M. தமிமுன் அன்சாரி M L A., பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி.