ஜன.28., நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 24 வது ஆண்டு விளையாட்டு நாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினன் M. தமிமுன் அன்சாரி M.A., MLA., அவர்கள் பங்கேற்று, தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாணவ, மாணவிகளின் கண்கவர் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளளரும், அமீரக தொழிலதிபருமான திரு.ஷேக் தாவூது மரைக்காயர், DSP திரு. புகழேந்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அதிகாரி திரு. சிவா, பள்ளி நிறுவனரும், தொழிலதிபருமான M.S.J. அப்துல் ஹமீது மரைக்காயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாநில அளவில் பல போட்டிகளில் தொடர்ந்து வென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 28.01.17
Author: admin
மஜக புதிய தலைமையகம் திறப்புவிழா!
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தை இன்று மாலை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் திறந்து வைத்தார். முன்னதாக தலைமையகம் அருகே கட்சிக் கொடியை பொருளாளர் ஹாரூன் ரசீத் அவர்களும், இப்றாகிம் சாஹிப் தெருவில் கட்சிக் கொடியை அவைத் தலைவர் நாசர் உமரி அவர்களும், ஏற்றி வைத்தார்கள். இந்நிகவில் மாநில செயலார்கள் நாச்சிகுளம் தாஜுதீன், N.A.தைமியா, சாதிக் பாட்ஷா, மாநில துனை செயலாளர்கள் புதுமடம் அனீஸ், புதுச்சேரி அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகுத்தனர். இளைஞர் அணி மாநில செயலாளர் ஷமிம் அஹ்மது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மனித உரிமைகள் அணி செயலாளர் பல்லவரம் ஷஃபி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக பேச்சாளர்கள் மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஹாலித், பிஸ்மி, ஹூசைன், தமீம் ரோஸ்லான், அஸார் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மஜக : தகவல் தொழில் நுட்ப அணி (MJK IT-WING) சென்னை
தேவூரணியை சுத்தம் செய்த இளைஞர்களை பாராட்டிய மஜக பொருளாளர்.
இளையான்குடி நகருக்கு மத்தியில் பள்ளிவாசல், கோயில் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு நகரின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த தேவூரணி என மக்களால் அழைக்கப்படும் தெய்வ புஷ்ப ஊரணி கடந்த 50 ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் கருவேலை மரங்களும், முட்களும், புதர்களும் மண்டிக்கிடந்தன. இதனால் நீர் வழிகள் அடைக்கப்பட்டு ஊரணியை சுற்றியுள்ள கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டன. சமீபத்தில் இளையான்குடியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மஜக சார்பில் பெரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டு அதன் விளைவாக தாசில்தார் அலுவலகம் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. தேவூரணியில் உள்ள கருவேல மரங்களை வெட்ட குத்தகைக்கு எடுத்தார் தப்பாத்தை சாகுல் என்ற இளைஞர். சாகுலும், அவரோடு இணைந்து கான்சா உஸ்மானும் மஜகவினர் ஒத்துழைப்போடு தேவூரணியில் உள்ள கருவேல மரங்களை அகற்றும்போது தான் கடுமையான ஆக்கிரமிப்புகளினாலும், குப்பைகள், வேஸ்ட் மணல் கொட்டுவதாலும் ஊரணி மூடி மறையும் அபாயம் தெரிய வந்தது. கருவேல மரங்களை அகற்றியதோடு, மணல்களையும், குப்பைகளையும் அகற்றினர். அப்போது 50 ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட படுக்கட்டுகள் வெளியே தெரியவந்து அது அப்படியே மீட்கப்பட்டு வண்ணம் பூடப்பட்டு தற்போது ஊரணி மிக அழகாக காட்சியளிக்கிறது. 24.1.2017 அன்று இளையான்குடி வருகை
அடையாரில் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றினார்.
ஜன.26., தென்சென்னை மாவட்டம் அடையாரில் 68-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாநில செயலாளர் தைமிய்யா தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். பங்கேற்ற மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் பகுதிச் செயலாளர் அன்வர்தீன், யூனுஸ் சேட் , அடையார் பள்ளிவாசல் ஜமாத்தினர் உட்பட பல்வேறு மனிதநேய சொந்தங்கள் பங்கேற்னர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தென் சென்னை மாவட்டம். 26.01.17
மஜக தலைமையகத்தில் குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு…
ஜன.26., மனிதநேய ஜனநாய கட்சியின் மாநில தலைமையகத்தில் நாட்டின் 68ஆவது குடியரசு தனத்தை முன்னிட்டு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் தேசிய கொடியேற்றி இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். உடன் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், துணைச் செயலாளர் அப்ஸர் ஸையத், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஹாலித் வட சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது அசிக் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் இருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) சென்னை. 26.01.17