ஈரோடு.மார்.01., இரண்டாம் ஆண்டில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டம் பூம்புகார் நகர் கிளை மற்றும் கமலா நகர் கிளையில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் பாபு ஷாகீன் ஷா மற்றும் சுல்தான்பேட்டை பகுதியில் மாவட்ட பொருலாளர் முகமது அலி ஆகியோர் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினர். நெறி பவுண்டேஷன் அநாதை இல்லத்திற்கு சென்று மதிய உணவு வழங்கப்பட்டது.. இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஸ்டீல் நஜிம், பொருலாளர் #ஹாலித்_கான் மாவட்ட இளைஞரணி செயலாளர் #யாசர்_அரபாத் , முன்னாள் மாவட்ட செயலாளர் ஷபீக் ,முஸ்தபா , சாகுல், குளம் ஜாகீர், சம்சுதீன், ஈரோடு எக்சான் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK_IT_WING) ஈரோடு கிழக்கு மாவட்டம் 28.02.2017
Author: admin
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு…
தூத்துக்குடி.மார்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க நாளான 28-02-2017 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் கிளையில் முதன்முறையாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. ஆத்தூர் கிளை செயலாளர் அன்வர் பாஷா முன்னிலையில் மாவட்ட செயலாளர் ஜாகிர்உசேன் அவர்கள் கொடியெற்றிவைத்து மனிதநேய ஜனநாயக கட்சி உருவான விதம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடு குறித்து நிர்வாகிகள் மற்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் விளக்கினார்... இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் கிளை நிர்வாகிகள், காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கொடியெற்றிவைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 28.02.2017
சத்தியமங்களத்தில் மஜகவின் இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வுகள்…
ஈரோடு.மார்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்களம் நகரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட துணை செயலாளர் ஆஷிப் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் பாபுலால், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் நஜீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாபு, நகர துணை செயலாளர்கள் உஸ்மான் அலி, முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொதுச் செயலாளர் SA.சையது அஹமத் பாரூக் கொடியேற்றி வைத்தார்கள். இறுதியில் சையதுஅலி நன்றியுரை கூறினார். தகவல் : மஜக தகவல் தொழில்நுட அணி. (MJK IT-WING) ஈரோடு மேற்கு மாவட்டம். 28.02.2017
காயல்பட்டினத்தில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க நிகழ்வு…
தூத்துக்குடி.மார்ச்.01., நேற்று பிப்ரவரி 28-2017 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. காலையில் காயல்பட்டினம் நகர செயலாளர் S.M.ஜிப்ரி அவர்களின் தலைமையில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. அன்று மாலை காயல்பட்டினத்தில் மூன்று இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காயல்பட்டினத்தில் நகர செயலாளர் S.Mஜிப்ரி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் காயல்பட்டினத்தில் மூன்று இடங்களில் கொடி ஏற்றிவைத்தார். இரண்டு இடங்களில் கொடி ஏற்றிவிட்டு மூன்றாவதாக புதிய பேருந்து நிலையம் முன்பு கொடி ஏற்றிவிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளை குறித்து விளக்கினார். இதில ஏராளமான தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) தூத்துக்குடி மாவட்டம். 28.02.2017
மஜக இரண்டாம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம்…
சென்னை.பிப்.28., இன்று சென்னையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவாக்கவிழாவையொட்டி மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர். சீமான், மஜக பொருளாளர் SS. ஹாரூன் ரசீது M. Com, மாநில அவைத்தை தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில செயலாளர் நாசிக்குளம் தாஜ் தீன், NA.தைமிய்யா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனீஸ், திண்டுக்கல் அன்சாரி, பல்லாவரம் ஷபி, இளைஞர் அணி செயலாளர் சமீம், மீனவர் அணி செயலாளர் பார்த்திபன், விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஏ. எம்.ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் முகம்மது அஸார் தீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஐஸ் ஹவுஸ் சேக்தாவூத் தெரு முழுதும் மக்கள் வெள்ளமாக இருந்தது. தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி. (MJK IT-WING) மத்திய சென்னை 28.02.2017