நாகை. மார்ச்.25., இன்று நாகப்பட்டிணம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நல துறை சார்பில் "ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டம்" மூலம் பாரம்பரிய உண திருவிழா நடைப்பெற்றது. இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று சிறப்பித்தார், கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், குதிரை வாலி, தினைவரகு, சாமை, மக்கா சோளம், உள்ளிட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் கண்காட்சியும், அது சார்ந்த விழிப்புணர்வும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு விழிப்புணர்வு பெறலாம். இதில் M.தமிமுன் அன்சாரி MLA பேசும்போது நமது பாரம்பரிய சுவையைப் பற்றி சிலாகித்து கூறினார். விறகு அடுப்பில் மண் பானையில் மீன் குழம்பு சமைத்தால் ருசியாக இருக்கும். மீனோடு, மாங்காய், கத்திரிக்காய், முருங்கை போட்டால் அந்த குழம்பு மணக்கும். இப்போது அப்படி யாரும் சாப்பிடுவதில்லை. காலையில் சிறந் உணவு இட்லிதான், ஆனால் பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் கொடுப்பது பெருமையாக பேசுகிறோம், நோயாளிகளுக்கு ஆப்பிள் கொடுப்பதை பெருமையாக கருதுகிறோம். ஆனால் கொய்யாப்பழமும், நெல்லிக்காயும் அதைவிட சத்தானது என்பதை
Author: admin
முத்துப்பேட்டையில் மாநில பொருளாளர் மற்றும் மாநில செயலாளர்!
முத்துப்பேட்டை, மார்ச்.26., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளரக சகோதரர் (தக்பீர்) #நெய்னா_முகம்மது அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். நகர செயலாளராக பணியாற்றிவந்த சகோதரர் #மைநூர்தீன் அவர்களை மாவட்ட துணை செயலாளருக்கு பரிந்துரைத்து முடிவு செய்யப்பட்டது. மாநில பொருளாளர் அண்ணன் ஹாரூன் ரசீது அவர்களும், மாநில செயலாளர் அண்ணன் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் ஆலோசனைகளை வழங்கினர். எதிர்வரும் ஏப்ரல் 22 ம் தேதி நகரில் முக்கிய இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றுவது என முடிவுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி. மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING முத்துப்பேட்டை ஒன்றியம் திருவாரூர் மாவட்டம்.
தமிழக மீனவர்களை பாதுகாக்கா இந்திய கடற்படை ரோந்து வர வேண்டும் .! சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு !
(பகுதி -4) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது . இதில் எனது தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு அதிக முன்னுரிமைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் . சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் நாகப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . நானும் அமைச்சர்கள் அண்ணன் ஜெயக்குமார் , அண்ணன் O.S.மணியன் ஆகியோரோடும் அங்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டோம் . கண்ணீரோடும் , கதறலோடும் தங்களின் வேதனைகளை கொட்டினார்கள் . அவர்கள் மீது இனியொரு தாக்குதல்கள் நடைபெறுவதையோ , வங்கக் கடலில் தமிழக மீனவர் இனி இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்படுவதையோ இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது . இந்த விசயத்தில் மத்திய அரசு இலங்கையை கடுமையாக எச்சரிப்பதோடு மட்டுமின்றி , தமிழக
நாகை அரசு மருத்துவமனையில் சுத்திகரிப்பு நீர் மையத்தை திறந்து வைத்தார் MLA!
நாகை. மார்ச்.25., இன்று நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2,10,000) அமைக்கப்பட்ட குடீநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (R.O. PLANT) M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நீண்ட கால வேண்டுகோளை நிறைவேற்றியதற்காக மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது பணிக்காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர பாடுபடுவேன் என்று கூறினார். மேலும் நாகை அரசு மருத்துவமனையை எல்லா வகையிலும் தரம் உயர்த்த முயற்சிப்பேன் என்றும், டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசுவேன் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், முன்னாள் சேர்மன் மஞ்சுளா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தங்க கதிரவன், நகராட்சி ஆணையர் ஜான்சன், உதவி பொறியாளர் வசந்தன் ஆகியோர்ருடன், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மருத்துவர்கள் காதர், முருகப்பன், ராஜா மற்றும் மஜக தொகுதி செயலாளர் தமீஜூதீன், நகர பொருளாலர் அஜிசூர் ரஹ்மான் உள்ளிட்டோருடன்
அப்பாவி முஸ்லிம் இளைஞர் கைது களம் இறங்கிய கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு…
கோவை.மார்ச்.25., இந்து முன்னனி பொறுப்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் அபுதாஹிரை CB CID காவல்துறை கைது செய்துள்ளது. அப்பாவி இளைஞரை மீட்க சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், T.M.S.அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 24.03.2017