நாகை. மார்ச்.25., இன்று நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2,10,000) அமைக்கப்பட்ட குடீநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (R.O. PLANT) M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்.
மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நீண்ட கால வேண்டுகோளை நிறைவேற்றியதற்காக மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது பணிக்காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர பாடுபடுவேன் என்று கூறினார்.
மேலும் நாகை அரசு மருத்துவமனையை எல்லா வகையிலும் தரம் உயர்த்த முயற்சிப்பேன் என்றும், டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசுவேன் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், முன்னாள் சேர்மன் மஞ்சுளா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தங்க கதிரவன், நகராட்சி ஆணையர் ஜான்சன், உதவி பொறியாளர் வசந்தன் ஆகியோர்ருடன், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மருத்துவர்கள் காதர், முருகப்பன், ராஜா மற்றும் மஜக தொகுதி செயலாளர் தமீஜூதீன், நகர பொருளாலர் அஜிசூர் ரஹ்மான் உள்ளிட்டோருடன் மஜக நாகை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
25.03.17