முத்துப்பேட்டை, மார்ச்.26., திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளரக சகோதரர் (தக்பீர்) #நெய்னா_முகம்மது அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். நகர செயலாளராக பணியாற்றிவந்த சகோதரர் #மைநூர்தீன் அவர்களை மாவட்ட துணை செயலாளருக்கு பரிந்துரைத்து முடிவு செய்யப்பட்டது.
மாநில பொருளாளர் அண்ணன் ஹாரூன் ரசீது அவர்களும், மாநில செயலாளர் அண்ணன் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களும் ஆலோசனைகளை வழங்கினர்.
எதிர்வரும் ஏப்ரல் 22 ம் தேதி நகரில் முக்கிய இடங்களில் கட்சி கொடிகளை ஏற்றுவது என முடிவுசெய்யப்பட்டது. இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி.
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
முத்துப்பேட்டை ஒன்றியம்
திருவாரூர் மாவட்டம்.