நாகையில் பாரம்பரிய உணவு திருவிழா M. தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு…

image

image

image

நாகை. மார்ச்.25., இன்று
நாகப்பட்டிணம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நல துறை சார்பில் “ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டம்”  மூலம் பாரம்பரிய உண திருவிழா நடைப்பெற்றது.

இதில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று சிறப்பித்தார்,
கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், குதிரை வாலி, தினைவரகு, சாமை,  மக்கா சோளம், உள்ளிட்ட சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின்  கண்காட்சியும், அது சார்ந்த விழிப்புணர்வும் சிறப்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து நான்கு  நாட்களுக்கு இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு விழிப்புணர்வு பெறலாம்.

இதில்  M.தமிமுன் அன்சாரி MLA பேசும்போது நமது பாரம்பரிய சுவையைப் பற்றி சிலாகித்து கூறினார்.

விறகு அடுப்பில் மண் பானையில் மீன் குழம்பு சமைத்தால் ருசியாக இருக்கும். மீனோடு,  மாங்காய், கத்திரிக்காய், முருங்கை போட்டால் அந்த குழம்பு மணக்கும். இப்போது அப்படி யாரும் சாப்பிடுவதில்லை. காலையில் சிறந் உணவு இட்லிதான், ஆனால் பிள்ளைகளுக்கு நூடுல்ஸ் கொடுப்பது பெருமையாக பேசுகிறோம், நோயாளிகளுக்கு ஆப்பிள் கொடுப்பதை  பெருமையாக கருதுகிறோம். ஆனால் கொய்யாப்பழமும், நெல்லிக்காயும்  அதைவிட சத்தானது என்பதை புரிய மறுக்கிறோம்.

உளுந்து களி சாப்பிடுவது உடம்புக்கு  நல்லது, இப்போது அதை  மறந்து  விட்டோம்.
நல்ல உணவுகளை சாப்பிடுவதில்லை, அது கிடைப்பதில்லை, இதுப்போன்ற நிகழ்ச்சிகளின்  மூலமாக அந்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். இவ்வாறு M.தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

தகவல் : சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,
நாகப்பட்டினம்.
25.03.2017