பெரம்பலூர் தொகுதி பரப்புரை … ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை ! இதுதான் மோடி அரசின் சாதனையா? மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கேள்வி…

ஏப்ரல்.8,

பெரம்பலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அருண் நேரு அவர்களை ஆதரித்து இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை மேற்கொண்டார்.

அமைச்சர் நேரு, அப்துல்லா MP, மாணிக்கம் MLA ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பரப்புரைக்கு பிறகு அய்யர்மலை என்ற இடத்தில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது….

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி கூறினார்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மோடி ஆட்சியில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கேட்டு விவசாயிகள் போராடுகிறார்கள்.

போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை மறக்க முடியாது.

16 மாதங்கள் டெல்லியில் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடியதை மறக்க முடியாது.

இவர்கள் ஆட்சியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார் என்ற அவல நிலை உள்ளது.

இதுதான் மோடி அரசின் சாதனையா?

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார்கள்.

செய்தார்களா?

ஒரு வருடத்திற்கு 70 லட்சம் வேலை இல்லா பட்டதாரிகள் உருவாகிறார்கள்.

வேலை இல்லா திண்டாட்டம் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை தீர்மானிக்க சட்டம் இயற்றப்படும் என கூறியுள்ளார்கள்.

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்றும், அதற்கு தினக்கூலி 400 ரூபாயாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்கள்.

ஏழை பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தரப்படும் என்பது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் தேர்தல் அறிக்கை மக்களிடம் தாக்கத்தை உருவாக்கியிருப்பதோடு, ஆட்சி மாற்றத்திற்கான அலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் பேசியபோது அந்த கடும் வெயிலிலும் அமைதியாக கூட்டம் கூர்ந்து கவனித்தது.

பிறகு வாக்கு கேட்ட வேட்பாளர் அருண் நேரு ‘இதற்கு பிறகு நான் என்ன பேசுவது? என கூறிவிட்டு சுருக்கமாக வாக்கு கேட்டு விடை பெற்றார்.

இத் தொகுதியில் மஜக-வினரின் தொடரச்சியான கள பங்களிப்பை அமைச்சர் நேரு பாராட்டினார்.

இந்நிகழ்வில் மஜக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், திருச்சி மாவட்டச் செயலாளர் பாபு, திருச்சி மாவட்ட அவைத் தலைவர் சேக்தாவூது, பொருளாளர் செய்யது முஸ்தபா, துணைச் செயலாளர்கள் சேக் அப்துல்லா, அன்வர், MJTS மாவட்ட பொருளாளர் முகம்மது ஜீ பேர் ஆகியோருடன், கடும் வெயிலில் பெரம்பலூர் தொகுதி மஜக நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#பெரம்பலூர்_நாடாளுமன்ற_தொகுதி
#MJKitWING
08.04.2024.