நாகை. மார்ச்.27., நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து M.தமிமுன் அன்சாரி அவர்கள் மேஜை , நாற்காலிகள் வாங்க ஏற்பாடு செய்து கொடுத்தார் . +2 தேர்வு நேரத்தில் உரிய உதவி செய்ததற்காக பெற்றோர்களும் , மாணவர்களும் , ஊர் மக்களும் நன்றி தெரிவித்துக் கொண்டனர் . தகவல் ; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 27-03-2017
Author: admin
சீமை கருவேல மரங்களை அகற்ற தனிச்சட்டம் தேவை..! சட்டசபையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…
(பகுதி -7) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... நான் எனது கன்னிப் பேச்சிலே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பேசினேன். நிலத்தடி நீரை உறிஞ்சி, காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி, சுற்றுச்சூழலை நாசப்படுத்தும் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என பேசியிருந்தேன் . தற்போது மதிமுக தலைவர் திரு.வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருக்கிறது. பல இடங்களில், நகரங்களில் அப்பணிகள் நடைபெறுகிறது. எனினும் இதற்காக ஒரு சட்டத்தை இயற்றி தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கினால் கேராளாவைப் போல தமிழ்நாடும் 100 சதவீதம் கருவேல மரங்கள் அற்ற மாநிலமாக மாறும். இதற்கு பகரமாக பழம் தரும், நிழல் தரும் மரங்களை நட்டு தமிழ்நாட்டின் பசுமையை வளர்க்கலாம் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு சட்டபேரவையில் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA பேசினார் . தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 27-03-2017
திருவாரூர் மாவட்டத்தில் மஜக கொடியேற்ற நிகழ்ச்சி பொதுச் செயலாளர் பங்கேற்பு .!
திருவாரூர்.மார்ச்.26., திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது . திருவாரூர் நகரம் , கொடிக்கால்பாளையம் மற்றும் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் மஜக கொடிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை H.சேக் அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்றினர் . இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலி கட்டிமேடு அய்யூப் கான் அடியக்கமங்கலம் நிஜாமுதீன் மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பொதக்குடி அசாருதீன் வர்த்தக அணி செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா தொழிற்சங்க அணி செயலாளர் புலிவலம் ஷேக் தாவூத், மீனவர் அணி செயலாளர் செய்யது மீரான் விவசாய அணி செயலாளர் பொதக்குடி நத்தர் கனி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். தகவல்
நீராதாரத்தை பெருக்க வேண்டும் .! சட்டபேரவையில் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு…
(பகுதி -6) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... 142 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. இவ்வாண்டு பருவ மழை 60% குறைவாக பெய்திருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், அரசு இதற்காக எடுத்திருக்கும் முன் முயற்சிகளை வரவேற்கிறேன். அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுக்க இப்பிரச்சினை புதிய சவாலாக உருவாகும் எனத் தெரிகிறது. எனவே நீர் மேலாண்மையில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் முறையை நாம் பின்பற்ற வேண்டும். அதுபோல மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக பழைய புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதில் இப்போது எத்தனை இருக்கிறது என்று தெரியவில்லை. தெலுங்கானாவில் 22 ஆயிரம் கோடியில் அரசு தொடங்கியிருக்கும் 'மிஷன் காகதீயா' எனும் இயக்கம் மூலம் 8 ஆயிரம் நீர்நிலைகளை மீட்டுருவாக்கி சாதனை செய்திருக்கிறார்கள். இதை நாம் பின்பற்றலாம். நிறைய நீராதாரங்களை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதுபோல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு இனி முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் கடலில் கலக்கும் நதிநீரை தடுக்கும் வகையில் தடுப்பணைகளை கட்டுவதோடு, தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்திற்கும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இதன்மூலம்
வெளிநாடுவாழ் தமிழர்களின் நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வைக்க வேண்டும்…
(தமிழ்நாடு சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை) (பகுதி - 5) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே ... வெளிநாடு வாழ் தமிழர்கள் குறிப்பாக சிங்கப்பூர் , மலேசியா , இலங்கை , புருனே , பர்மா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்பு நூல்களை தமிழக அரசு நூலகங்களில் வாங்கி இடம்பெற செய்ய வேண்டும் . தற்போது நான் சிங்கப்பூர் , மலேசியாவுக்கு சென்றபோது அங்குள்ள தமிழ் இலக்கியவாதிகள் இக்கோரிக்கையை வைத்தனர் . எனவே தமிழக அரசு இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் . இவ்வாறு நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி சட்டப்பேரவையில் பேசினார் . தகவல் நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 26.03.2017