சென்னை.ஏப்.01., அண்ணா IAS அகாடமியின் முன்னாள் இயக்குனரும் சமூக சேவைகருமான பேரா. MF. கான் அவர்கள் இன்று மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி...) என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.. பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து ஏராளமான IAS, IPS அதிகாரிகளை உருவாக்கிய சமூக நீதி சிந்தனையாளரை இன்று நாம் இழந்திருக்கிறோம். தனது குடும்ப நிதியில் இருந்து கல்விப் பணிக்காக 1கோடி ரூபாய் தருவதாக கூறி அதற்க்கு சரியான நபர்களை தேடியலைந்தார். அந்தப் பணம் ஏழை எளிய மக்களின் கல்விக்காக நேர்மையாக செலவிடப்பட்ட வேண்டும் என்று நினைத்தார். இது குறித்து பலமுறை என்னிடம் உரையாடிருக்கிறார். அவரது தந்தை தீவிர இடதுசாரி களத்தில் இயங்கியவர் பின் தங்கிய மக்களுக்காக போராடியவர் அதே வழியில் பேரா. MF கானும் இயங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கிய போது தனது வாழ்த்துக்களை வாயார கூறி மகிழ்ந்தார். கடந்த மார்ச் (2016) மாதம் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு அவரது கால் அகற்றப்பட்டது. அவரை பார்க்க நானும் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மியும் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போதும் சமூகத்தை பற்றியும், கல்வி குறித்தும் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. திடீர் என்று அருகில் இருந்த தனது
Author: admin
மஜக பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி MLA தலைமையில் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பினர் அமைச்சரை சந்தித்து மனு…
சென்னை.ஏப்ரல்.01., கோவை சசிக்குமார் கொலை வழக்கில் அபுதாஹிர் என்ற அப்பாவி முஸ்லிம் இளைஞரை கைது செய்த கோவை CB CID காவல் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்ககோரியும், அபுதாஹிரை விடுதலை செய்யக் கோரியும் மஜக பொதுச் செயலாளர் M.தமீமுன் அன்சாரி MLA தலைமையில் கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அவர்களை சந்தித்து மனு அளித்தனர். இந்நிகழ்வில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜி இனாயத்துல்லாஹ் ராஜா உசேன், மஜக மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மஜக கோவை மாவட்ட செயலாளர் அப்பாஸ், SDPI, INTJ மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 01.04.17
டெல்லி விவசாய போராட்ட களத்தில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA எழுச்சியுரை…
புது தில்லி. ஏப்.01., இன்று காலை டெல்லி வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் 19ஆவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்தார். அவரை போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் தோழர் அய்யாக்கண்ணு, தோழர் தினேஷ் ஆகியோர் வரவேற்று விவசாயிகளிடம் உற்சாகமாக அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு விவசாயிகளுக்கு மத்தியில் பொதுச்செயலாளர் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். விவசாயிகள் அவரது உரையை வரவேற்று கைத்தட்டி தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். அதன் பிறகு பொதுச்செயலாளரிடம் விரிவாக பேசிய விவசாயிகள், இவ்விசயத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசுக்கு நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும் என்றும், எங்களுடைய இந்த பிரச்சனைகளை, போராட்ட உணர்வுகளை முதல்வரின் தனிப்பட்ட கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இதற்கு பதில் அளித்த பொதுச்செயலாளர் அவர்கள் உடனடியாக இன்று இரவே முதல்வருடைய தனி கவனத்திற்கு நேரடியாக எடுத்து செல்வதாக உறுதி அளித்தார். பொதுச் செயலாளருடைய இந்த முயற்ச்சிக்கு விவசாயிகள் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து மூன்று மணிநேரம் அவர்களோடு களத்தில் இருந்த பொதுச் செயலாளர் அவர்கள், அதன்பிறகு அவர்களுடைய
ஆவடியில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம்…
சென்னை,ஏப்.01., சென்னை ஆவடியில் திருவள்ளுவர் மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று மாவீரன் திப்பு சுல்தான் திடல் அருகில் நடைபெற்றது. மஜக நகர செயலாளர் ச.சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில், நகர பொருளாளர் ச.நாகூர் மீரான் அவர்கள் முன்னிலையில், துணை செயலாளர் டி.தேவகாந்தி (எ) பாபு அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நகர துணை செயளாலர் லி.சுல்தான் இஸ்ஹாக் தொகுப்புரை நிகழ்த்தினார். மாநில பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA மற்றும், மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீத் M.com ஆகியோர் மத்திய மோடி அரசை கண்டித்து தோலுரித்து வீரமிகு எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். இதில் மாநில செயலாளர்கள் N.A.தைமியா, நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, புதுமடம் அனிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் J.ஷமிம் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர் ஆகிய மாநில நிர்வாகிகளுடன், திருவள்ளுவர் மே மாவட்ட செயலாளர் A.அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் செய்யது இஸ்மாயில், துணை செயலாளர்கள் பக்ருதீன், பாஸ்கர், முஹம்மது, இளைஞர் அணி செயலாளர் செய்யது அபுதாஹிர், வர்த்தக அணி
நாளை டெல்லி சென்று போராடும் விவசாயிகளை சந்திக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
சென்னை.மார்ச்.31., டெல்லியில் கடந்த 18ஆவது நாட்களாக பல்வேரு கோரிக்கைகளுக்காக தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு கொடுப்பதற்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA நாளை 01/04/2017 சனிக்கிழமை டெல்லி புறப்படுகிறார். காலை புறப்பட்டு செல்லும் அவர் நாளை மதியம் ஜந்தர் மந்தரில் விவசாயிகளை சந்திக்கிறார். தகவல் : தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தலைமையகம்.