மாணவர் இந்தியா புதுக்கோட்டை (கிழக்கு) மாவட்ட செயலாளர் நியமனம். M.பாசித் கான்.B.E. (அறந்தாங்கி) அலைப்பேசி - 9750960524 மாணவர் இந்தியா நிர்வாகிகளும், தோழர்களும் இந்த சகோதரருக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவண், அசாருதீன், மாநிலச் செயலாளர் மாணவர் இந்தியா 12.05.2017
Author: admin
கோவை மாவட்ட அனைத்து ஜமாத்கள், கட்சிகள், இயக்கங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மஜக பங்கேற்பு…
கோவை.மே.13.,நேற்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத்கள், இஸ்லாமிய இயக்கங்கள், தலித் மற்றும் திராவிட முற்போக்கு இயக்கங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, முஸ்லிம்லீக், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ஜாக், போன்ற பல முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இச்சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் பாரூக் படுகொலைக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் கலையப்பட்டது.! இக்கூட்டத்தில் மஜக சார்பாக மாநில செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கைவிளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் ரபீக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் செய்யது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்!! தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 12.05.2017
மாணவர் இந்தியா தலைமையக நியமன அறிவிப்பு…
மாணவர் இந்தியா காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் நியமனம். J.தமீம் அன்சாரி B.E (கொளப்பாக்கம்) அலைப்பேசி-9841186572 மாணவர் இந்தியா நிர்வாகிகளும், தோழர்களும் இந்த சகோதரருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவண், முஹம்மது அஸாருதீன், மாநிலச் செயலாளர், மாணவர் இந்தியா. 12.05.2017
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டு.
(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை...) தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம் முதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்பில் இருக்கும் மாணவ, மாணவிகள் ஓரிரு மதிப்பெண்கள் குறையும் போது ஏமாற்றம் அடையக்கூடிய சூழலும், இதனால் மனம் வெதும்பக் கூடிய நிலையும் ஏற்பட்டு வந்தது. இந்த ஆண்டு தரவரிசை முறையில் ( Ranking System ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட மாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் அறிவித்தார். அதன் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நடைமுறையை கல்வியாளர்களும், மாணவர் சமுதாயமும் வரவேற்று மகிழ்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த முயற்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மனனம் செய்யும்
நெய்வேலியில் இரண்டு கிளைகளில் கொடியேற்றம் நிகழ்ச்சி…
கடலூர்.மே.12., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலிக்குட்பட்ட இரண்டு கிளைகளின் சார்பாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நகர பொருளாளர் ஜாஹீர் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் இப்ராகிம் கொடியேற்றி தொடங்கி வைத்தார்கள். உடன் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக நகர இளைஞர் அணி செயளாலர் மன்சூர், நகர இளைஞர் அணி துணை செயலாளர் அசாருதீன், ஒன்றிய செயலாளர் ராஜா முஹம்மத், ஒன்றிய துணை செயலாளர்கள் பாபர் ஒலி, அப்துல் ரஹுமான், பாபு மற்றும் ஜமாத் நிர்வாகி செயலாலர் ஹசன் முஹம்மத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 12.05.2017