கோவை மாவட்ட அனைத்து ஜமாத்கள், கட்சிகள், இயக்கங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மஜக பங்கேற்பு…

image

image

image

கோவை.மே.13.,நேற்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லீம் ஜமாத்கள், இஸ்லாமிய இயக்கங்கள், தலித் மற்றும் திராவிட முற்போக்கு இயக்கங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை அண்ணாமலை அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி, தமுமுக, மமக, எஸ்.டி.பி.ஐ, முஸ்லிம்லீக், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், ஜாக், போன்ற பல முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

இச்சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம்
பாரூக் படுகொலைக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் கலையப்பட்டது.!

இக்கூட்டத்தில் மஜக சார்பாக மாநில செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கைவிளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன்,
மாவட்ட துணை செயலாளர் ரபீக், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாவட்ட செயலாளர் சலீம், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் மற்றும் செய்யது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டார்கள்!!

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
12.05.2017