தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டு.

image

(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை…)

தமிழகத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்பட்டு வந்தது. இதன் மூலம் முதல் மதிப்பெண் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்பில் இருக்கும் மாணவ, மாணவிகள் ஓரிரு மதிப்பெண்கள் குறையும் போது ஏமாற்றம் அடையக்கூடிய சூழலும், இதனால் மனம் வெதும்பக் கூடிய நிலையும் ஏற்பட்டு வந்தது.

இந்த ஆண்டு தரவரிசை முறையில் ( Ranking System ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட    மாட்டாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோடையன் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நடைமுறையை கல்வியாளர்களும், மாணவர் சமுதாயமும் வரவேற்று மகிழ்கின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இந்த முயற்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், மனனம் செய்யும் கல்வி முறையை ஒழித்து புரிந்து படிக்கும் கல்வி முறையை கொண்டு வரும் வகையில் கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சி கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்
எஸ்.எஸ். ஹாரூன் ரசீது,
மாநில பொருளாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.