இராமநாதபுரம்.ஜூலை.15., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. அதில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகளை வைத்து பரமக்குடி நகரில் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் கட்சிக்கொடிகள் ஏற்றுவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பரமக்குடி செய்யது இபுராகிம் மாவட்ட துணை செயலாளர்கள் மஞ்சூர் அப்துல் கபூர், இராமநாதபுரம் நசீர் ,மரைக்காயர் பட்டிணம் சோனாப்பூர் அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி இராமநாதபுரம் மாவட்டம். #MJK_IT_WING 14.07.2017
Author: admin
நா.காமராசன், நாகூர்அனீபா, மணவை முஸ்தபா, ஆகியோரை தமிழக அரசு சிறப்பிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி சட்டசபையில் கோரிக்கை!
பேரன்பிற்குரிய மாண்புமிகு பேரவைத் துனை தலைவர் அவர்களே, தமிழுக்காக பாடுபட்ட தமிழறிஞர்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும். அந்தவகையிலே மறைந்த தமிழ் கவிஞர் நா.காமராசர் அவர்களை போற்றும் வகையில் அவரது கவிதை நூல்களை அரசுடைமையாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதுபோல் அறிவியல் தமிழை வளர்த்து அதன் வழியாக 80 ஆயிரம் அறிவியல் தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்து செம்மொழித் தமிழுக்கு சிறப்பு சேர்த்து உலக தமிழர்களால் பாராட்டபட்ட தமிழறிஞர், மணவை முஸ்தபா அவர்களுக்கு தமிழ்கூறும் நல்லுலகம் நன்றிகடன் பட்டிருக்கிறது. அவரை கண்ணியபடுத்தும் வகையிலே அவர் பெயரால் சென்னையில் அறிவியல் தமிழ் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை தமிழக அரசு நிறுவ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை... இந்த பாடல் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, ஏன் கடவுள் மறுப்பை கொள்கையாகக் கொண்ட அண்ணன் தனியரசு போன்றவர்களால் கூட வரவேற்க்ககூடிய, பாரட்டபடக்கூடிய ஒரு பாடல். இந்த பாடலை பாடியவர் நாகூர் அனிபா அவர்கள். அவரின் அரசியல் கருத்து வேறுபாடுகள் என்பது வேறு. ஆனால், அவர் தமிழை மையப்படுத்தி, உலகம் முழுக்க கொடுத்த குரல் என்பது சாதாரண விஷயமல்ல. புலவர் ஆதித்தனார் அவர்களுடைய வரிகளை பாடினார். "பாண்டியர் ஊஞ்சலில் அடி வளர்த்த
திருச்சியில் மஜக பொதுச் செயலாளர் ஜும்மா உரை!
திருச்சி.ஜூலை.14., இன்று திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காதர் பள்ளிவாசலில் ஜமாத்தினரின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA வருகை புரிந்தார். அங்கு சமுகநல்லிணக்கம் குறித்து ஜூம்மா உரை நிகழ்த்தினார். அவருடன் திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, து.செயலாளர் ஷேக்தாவூத், ரஃபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் ; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING 14.07.2017
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி ஆலோசனைக் கூட்டம்!
கோவை.ஜூலை.14., நேற்று கோவை மனிதநேய ஜனநாயக கட்சி கிணத்துக்கடவு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஜாபர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரபீக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நிகழ்கால அரசியல் குறித்தும் நாம் செயல்படவேண்டிய முறைகள் குறித்தும் உரையாற்றினார். இந்நிகழ்வில். இம்தியாஸ், ஆத்துப்பாலம் அபு, ஷாஜகான் மற்றும் பகுதி கிளைகழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி சகோதரர் ஒருவர் தம்மை மஜகவில் இணைத்துக் கொண்டார். இக்கூட்டத்தின் முடிவுகள். 21.07.17 வெள்ளி அன்று மஜக கிணத்துக்கடவு பகுதிசார்பாக 15 இடங்களில் கொடியேற்று விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 13.07.2017
ஊத்துக்குளியில் மஜக சார்பில் இரத்த பரிசோதனை முகாம்…
திருப்பூர்.ஜுலை.14., நேற்று முன்தினம் புதன்கிழமை கடந்த ஆண்டுகள் போல் இந்த ஆண்டும் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊத்துக்குளி கிளையின் சார்பாக அரசு நூற்றாண்டு விழா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இரத்த வகையை கண்டறியும் விதமாக இரத்த பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது.! இந்த நிகழ்வில் மஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் M.காதர் கான். மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் மாவட்ட பொருளாளர். S.A.முஸ்தாக் அஹமது அவர்கள். இளைஞரணி துணைச் செயலாளர் S.அபுதாஹீர் அவர்கள். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் B.நெளஃபில் ரிஸ்வான் அவர்கள் மற்றும் மீரான், ஊத்துக்குளி நிர்வாகிகள் S.சாகுல் ஹமீது அவர்களும், சாதிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியர்கள் மஜக வின் நிகழ்சியை பாராட்டியவர்கள். சில கோரிக்கைகளை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தனர்..! தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருப்பூர் மாவட்டம். 13.07.2017