இஸ்லாமிய கலாச்சார பேரவை சவுதி அரேபியா ரியாத் மண்டல புதிய நிர்வாகிகள் நியமனம். 1. A.ஹாஜா கமருதீன் மண்டல செயலாளர் அடியக்க மங்களம் ( திருவாரூர் ) செல்-00966506914421 2. A. ஜாகிர்உசேன் மண்டலபொருலாளர் ( திருச்சி ) செல் 00966533457299 3.J.சாதிக்பாஷா ஒரிங்கினைப்பாளர் திருவிடச்சேரி ( திருவாரூர் ) செல் 00966552600229 4.A.ஹாஜா மைதீன் சட்டஆலோசகர் ( நன்னிலம் ) செல் 00966503322382 5.A.நைனார் முகம்மது துணை செயலாளர் சென்னை செல் 00966509655885 6. நாகூர் ஹமீது ஊடக பிரிவு ( செயலாளர் ) நாகூர் செல்.00966 557825088 7.ஷேக்தாவூது துணை செயலாளர் தோப்புத்துறை செல்-00966532513958 8.நீவாஜிதின் துனை செயலாளர் அடியற்கைமங்களம் செல்-00966532019517 9.சுலைமான் துனை செயலாளர் சென்னை செல்-00966509511807 இவர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தாருங்கள். (ஒப்பம்) M.தமிமுன் அன்சாரி, M. A, MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 09.08.17
Author: admin
பல்வேறு கட்சியில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…!
இராமநாதபுரம்.ஆக.08., நேற்று முன்தினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்தார்கள். அப்பொழுது வருகை தந்த மதுரையை சேர்ந்த பல்வேறு கட்சியில் இருந்து விலகி 30 இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். பரமக்குடியில் பயணியர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மஜக மாநில பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புதிதாக வந்த அனைவருக்கும் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் பற்றி தெளிவாக விளக்கினார்கள். இந்நிகழ்வில் மஜக இணை பொதுச் செயலாளர் K.M.மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், இராமநாதபுரம் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING மதுரை வடக்கு மாவட்டம். 06.08.2017
ஈரோட்டில் தொடங்கியது மஜக-வின் நன்கொடை சேகரிப்பு !
ஈரோடு.ஆக.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டு, மாவட்டம் தோறும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இம்மாதம் முழுவதும் பிரமுகர்கள், வணிகர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. நாகை (தெற்கு) மாவட்டத்தை தொடர்ந்து, ஈரோடு (கிழக்கு) மாவட்டத்திற்கு இன்று (08.08.17) மஜக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி ஆகியோர் வருகை தந்தனர். வழக்கறிஞர் தேவராஜ், பாதிரியார் பிரகாஷ், தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் ஜமாத்தார்கள் என சமூகத்தில் பல்வேறு தரப்புகளை சேர்ந்தவர்களையும் சந்தித்து, துண்டு பிரசுரங்களை வழங்கி நன்கொடைகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பாபு, ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷஃபி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநாவாஸ் உள்ளிட்டோருடன் ஈரோடு மாநகர ம.ஜ.க வினரும் பங்கேற்றனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING ஈரோடு கிழக்கு மாவட்டம் 08.08.17
தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரத்தில் மஜக கொடியேற்றம்…! மஜக மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
தேனி. ஆக.07., மனிதநேய ஜனநாயக கட்சி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காவல்துறையின் பல எதிர்புகளை தாண்டி மஜகவின் கொடி ஏற்றபட்டது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீத் M.com அவர்கள் கொடி ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். மற்றும் உத்தமபாளையத்தில் மேலும் பல இடங்களில் கொடியேற்றம் நடத்துவதற்கு காவல்துறைஅனுமதி தரமறுத்த இடங்களை ஆய்வு மேற்கொண்டு காவல் துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு அனுமதி வாங்கி தருவதாக கூறினார். பிறகு தேனி மாவட்டம் மஜக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் செய்து நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனை வழங்கினார். அதன்பின் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு சிறப்பாக விளக்கம் அளித்தார். இந்த கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டத்தை மஜக தேனிமாவட்ட செயலாளர் M.M.ரியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநில துனை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன், மாவட்ட நிர்வாகிகள் காதர், தமீம், ஷேக், ஷபிர், காதர் (Western mobile), உத்தமபாளையம் நகர செயலாளர் உபைதுர் ரஹ்மான், கம்பம் நகர செயலாளர் அயூப்கான், மருத்துவ அணி லியாகத் அலி ஆகியோர், மேலும்
தூத்துக்குடியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மஜக மனு..!
தூத்துக்குடி.ஆக.07., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக தாமிரபரணி நதிநீர் ஓடும் ஆறாம்பண்ணை மற்றும் கொங்கராயகுறிச்சி பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுகொண்ட ஆட்சியாளர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் நவாஸ், மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் (MJTS) ராஸிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது சபிர் ஆகியோர் இருந்தனர். உடன் கொங்கராயகுறிச்சி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம். 07-08-2017