ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்க! பேரறிவாளனுக்கு பரோல் வழங்குக! தமிழக முதல்வருக்கு தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் கூட்டாக நினைவூட்டல் கடிதம்! தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA , மஜக பொதுச்செயலாளர் M. தமிமும் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் தமிழக முதல்வருக்கு கூட்டாக கையெழுத்திட்டு இன்று (10.08.17) கடிதம் எழுதியுள்ளனர். இன்று தலைமை செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது.... நீண்ட காலமாக சிறையில் வாடும் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரியும், ஐயா MGR அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளை கடந்து சிறையில் வாடும், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை முன்விடுதலை செய்வது குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் பேசியுள்ளோம். தங்களிடம் நேரிலும் விரிவாக வலியுறுத்தி பேசியுள்ளோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் தாங்கள் பதிலளித்தது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. இவ்விஷயத்தில் கால தாமதம் செய்யாமல் வாய்ப்பிருந்தால்; ஆகஸ்ட் 15 அன்று 71 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உரிய அறிவிப்புகளை இது குறித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதில் மனிதநேயத்தோடு தாங்கள் எடுக்கும் முயற்சிகளை வருங்காலமும் வரலாறும்
Author: admin
தலித் கிருஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு! ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு!
தஞ்சை.ஆக.10., தலித் கிருஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு தஞ்சாவூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழ் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் ஏராளமான கிறித்துவ சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி பேசிய உரையின் சுருக்கம் வருமாறு: 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று தான், அன்றைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இந்து மதத்தை தவிர்த்த இதர மதத்தில் உள்ள தலித்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற ஆணையை வெளியிட்டார். அதில்தான் தலித் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். அந்த நாளைதான் அவர்கள் கறுப்பு தினமாக கடைப்பிடிக்கிறார்கள். 1956 ல் சீக்கிய மதத்தை சேர்ந்த தலித்துகளுக்கும், பெளத்த மதத்தை சேர்ந்த தலித்துகளுக்கும் SC பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீடு வழங்கினார்கள். ஆனால் தலித் கிறிஸ்தவர்களை அதில் திட்டமிட்டு ஒதுக்கினார்கள். இந்திய கிறிஸ்தவர்களில் பெரும்பாலோர் தலித்துகள்தான். எனவே சமூக நீதியை மதிக்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்
கோவை அரசு மருத்துவமனைக்கு மஜக முயர்ச்சியில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா!
கோவை.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர் அறக்கட்டளை இணைந்து கோவை அரசு மருத்துவமனையின் அவசர தேவைக்காக மருத்துவ உபகரணங்கள் மஜக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு அவர்கள் தலைமையில் இருப்பிட மருத்துவ அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, நிர்வாகிகள் அஜீஸ், அக்கீம், பிரோஸ், அபு, காதர் மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீஷ்யாம்பைரவர் அறக்கட்டளைநிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 10.08.17
குடியாத்தம் நகரில் மஜகவின் முயற்சியால் மருத்துவ முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
குடியாத்தம்.ஆக.10., டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நகராட்சி ஆணையரிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று முதல் கட்டமாக குடியாத்தம் நகரம் 7, 8- வது வார்டில் குடியாத்தம் நகராட்சி சார்பாக மருத்துவ முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்முகாமை நகராட்சி ஆணையர் சங்கர் அவர்கள் துவங்கி வைத்து பொது மக்களுக்கு நிலவேம்பு கசயாம் வழங்கினார். இம் மருத்துவ முகாமில் வார்டு பொது மக்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவி மற்றும் மருத்துவ அலோசனையை பெற்றனர். பின்னர் சுற்றி உள்ள பகுதிகளில் மீண்டும் ஒரு முறை ஆய்வு பணி மேற்கொண்டார். 800- மீட்டர் அளவுக்கு புதிய சாலைகள் மற்றும் கால்வாய்கள் பழைய தண்ணீர் சிண்டக் தொட்டியை அகற்றி புதிய தண்ணீர் தொட்டி அமைத்து தர உடனடியாக நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்செல்வன் SO, கெளவுசல்யா ஆய்வர், அரசு மருத்துவர் சிலம்பரசன், பிரகாஷ் SI, பிரபு,
கல்பாக்கத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மஜக மாவட்ட பொதுக்குழு…
காஞ்சி.ஆக.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு கல்பாக்கத்தில் மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் பங்கேற்று பொதுக்குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார்கள். மாவட்டப் பொருளாளர் மீராஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் யூஸுப், மாவட்டத் துணைச் செயலாளர் சர்தார் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மாவட்டம், ஒன்றியம், கிளை நிர்வாகிகளும் பங்கேற்று கட்சியின் எதிர்கால செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்தனர். இந்நிகழ்வில், காட்டாங்குளத்தூர் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். முன்னதாக, கல்பாக்கத்தில் இரண்டு இடங்களில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்குழு நிறைவடைந்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு பொதுச் செயலாளர் பேட்டியளித்தார். பொதுக்குழு நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்பாக்கத்தைச் சார்ந்த மாவட்டத் துணைச் செயலாளர் சமியுல்லாஹ், IKP மாவட்டச் செயலாளர் அப்துல் ரஷீது, நகரச் செயலாளர் காலிப் உட்பட நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம் 09.08.17