வேலூர்.ஆக.12: வேலூர் (மே) மாவட்டம் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் உள்ள 36- வார்டுகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்ற வேண்டும் என்றும், சாலைகள் இல்லாத தெருக்களில் சாலைகள் போடுவதுற்க்கும், கால்வாய்கள் துர்வாரவும், கழிவுநீர் தேங்கி உள்ள பகுதிகளில் விஷ பாம்புகள் அதிகம் இருப்பதால் அதனை சுத்தம் செய்து, மண்டி கிடக்கும் கருவேல மரங்கள் அகற்றி சீரமைப்பு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கை ஏற்ற நகராட்சி நிர்வாகம் முதல் கட்டமாக MBS-நகர் 8- வது வார்டு சுற்றி உள்ள பகுதிகளில் சாலைகள் ஓரமாக உள்ள கருவேல மரங்கள் அகற்றி நிலையில் தற்போது கழிவுநீர் செல்ல கால்வாய்கள் தூர்வார்ப்பட்டது. களத்தில் மஜக நகர செயலாளர் S.அனீஸ், நகர பொருளாளர் முபாரக் அஹமத், நகர து.செயலாளர் சலீம், கிளை நிர்வாகிகள் அல்தாப், கபீர், முன்னா, அபுல், சேட்டு, அலீம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர். #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையருக்கும் மற்றும் நகராட்சி உதவி அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். தகவல்; #மஜக_தகவல்_தொழில் நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் மே மாவட்டம் குடியாத்தம் நகரம் 12.08.2017
Author: admin
மஜக சார்பில் வேலூரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு…!
வேலூர்.ஆக.11., தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி வேலூர் மாநகரில் படிப்படியாக பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக தொடரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று 11.08.2017 வெள்ளிக்கிழமை வேலூர் பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் அருகில் இன்று மதியம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி ஆகியோர் மற்றும் பல்வேறு கிளை மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 11.08.17
நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் நாகப்பட்டினம் வருகை! மஜக மாநில விவசாய அணி செயலாளர் தலைமையில் வரவேற்பு!
#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நாகை.ஆகஸ்ட்.11., கடந்த (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #M_தமிமுன்_அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு வருகை தந்தது. அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை.முபாரக் அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் தோழர் P.R. பாண்டியன் அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். தோழர் P.R. பாண்டியன் அவர்கள் தனது உரையில் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்றத்தில்
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பு…
நாகை.ஆக.11., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டது. திட்டச்சேரி பேரூராட்சி நைனார் புதுத்தெரு-வில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 4லட்சம் மதிப்பீடு கொண்ட 80மீட்டர் தொலைவிற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 11/08/2017
கம்பம் பெரியபள்ளி ஜமாத் தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு!
தேனி. ஆக.11.,கடந்த சில தினங்களாக தேனி மாவட்டம் முழுதும் கட்சி சுற்றுபயணத்தில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள், கம்பம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்து ஜமாத் தலைவர் பாவா ஃபதுருதீன் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் அரசியல் நிகழ்வு மற்றும் பொதுவாழ்வு பற்றி கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பு மிக்க மகிழ்சியை தந்தது. இச்சந்திப்பில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன், மாவட்ட செயலாளர் கம்பம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கம்பம் நகர நிர்வாகிகள் களந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 10.08.2017