திருச்சி.செப்.03., மாணவர் அமைப்பான மாணவர் இந்தியா சார்பில் திருச்சி 49-வது வார்டு காயிதேமில்லத் தொடக்க பள்ளி அருகில் நீட்தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரியும், நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து உயிர் நீத்த மாணவி அனிதாவுக்கு ஆதரவாகவும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டம் மாணவர் இந்தியா திருச்சி மாவட்ட செயலாளர் புரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மஜக திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, மாணவர் இந்தியா மாவட்ட அமைப்பாளர் மைதீன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் மற்றும் விடுதலை சிறுத்தை மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், ஜம்.ஜம் பஷீர், ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம், தகவல் தொழில்நுட்ப அணி சேட் ஆகியோர், கிளை நிர்வாகிகள் பக்கீர் மொய்தீன், அப்துல் காதர், அபுபக்கர் சித்திக், அமீர், ரியாஸ், ரஹ்மத்துல்லா மற்றும் மாணவர்கள் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். தகவல்: மாணவர் இந்தியா ஊடக பிரிவு திருச்சி மாநகர் மாவட்டம். 03.09.2017.
Author: admin
மாணவர் அமைப்பினர் கூட்டாக சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு…!
சென்னை.செப்.03., இன்று சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் மாணவர் இந்தியா அமைப்புடன் சேர்ந்து பல அமைப்புகள் இன்று மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பை செய்து மாணவி அனிதாவின் கனவான "நீட்''டில்லா தமிழகம் உருவாக ஆதரவழிப்போம் என்றும், அனிதா ஆக்ட் என்ற சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார். இச்சந்திப்பில் மாணவர் இந்தியா சார்பில் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணை செயலாளர் பசீர் மற்றும் ஊடக பிரிவு கார்த்திக், கோட்ஷோ (Cotso) அமைப்பு, டாக்டர்.எழிலன் ஆகியோர் இருந்தனர். தகவல்: மாணவர் இந்தியா ஊடகபிரிவு சென்னை. 03.09.17
ஆட்டோ டிரைவர்களிடம் குறை கேட்டார் நாகை MLA
நாகை நகரில் தாமரைக்குளம் - செல்லூர் சாலையை சீர்படுத்தக்கோரி பல்லாண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி தமிமுன் அன்சாரி MLA அவர்களின் முயற்சியில் அந்த சாலை தற்போது போடப்பட்டு வருகிறது. இன்று சாலைப்பணியை பார்வையிட்ட M.தமிமுன் அன்சாரி MLA , அச்சாலையில் இயங்கும் ஆட்டோ நிறுத்த நிலைய ஓட்டுநர்களை சந்தித்து உரையாடினார். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு அவர்கள் MLAவுக்கு நன்றி கூறினர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 03.09.2017
மாணவி அனிதாவின் இறுதி சடங்கில் மாணவர் இந்தியா..!
கடலூர்.செப்.03., நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்த துக்கத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் இறுதி சடங்கில் நேற்று கடலூர் வடக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் தலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். உடன் மாஜக மாவட்ட இ.அணி துணை செயளாலர் A.மன்சூர், நெய்வேலி நகர இ.அணி செயளாலர் அசார் ஆகியோர் இருந்தனர். அனிதாவின் இழப்பால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது குடும்பத்திற்கு அனிதாவின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா உடனிருந்து போராடும் என்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். தகவல்; #மாணவர்_இந்தியா #ஊடகபிரிவு 02.09.17
அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்து கோவையில் மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்!
கோவை.செப்.02., கோவை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்தும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக் மற்றும் அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரத்தில் முடிவுசெய்து ஏராளமான மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தகவல்: #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு #கோவை_மாநகர்_மாவட்டம் 02.09.17