(நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதி, திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட நரிமணம், குத்தாலம், கோபுராஜபுரம், எரவாஞ்சேரி, மத்தியக்குடி உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் மத்தியக்குடி கிராமத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவ்வூரில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து எண்ணெய் செல்லும் குழாயில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட உடைப்பால் எண்ணெய் கசிவு ஏற்பட்டு நிலத்தில் எண்ணெய் வெளியாகியுள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுப்பட்டுள்ள ONGC நிறுவனம் எண்ணெய் குழாய்களை சரிவர பராமரிக்காததால் துருப்பிடித்து குழாய்களில் உடைப்பு ஏற்ப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற விபத்துகள் மூடி மறைக்கப்படுகிறது. ONGC நிறுவனத்தின் செயல்பாடுகளால் நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெரியவர்களும், குழந்தைகளும் சுவாச கோளாறுகள் ஏற்ப்பட்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றசாட்டுகிறார்கள். ONGC நிறுவனம் இப்பகுதியின் இயற்கை வளங்களை எடுக்கும் நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உருப்படியாக ஏதும்
Author: admin
பொதக்குடி மஜக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!
திருவாரூர்.அக்.03,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 03.10.17
துப்பாக்கி சூட்டில் 58 பேர் பலி..!! அமெரிக்க மக்களுக்கு அனுதாபங்கள்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு..) அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் 67-வயதான ஸடீபன் பேட்காக் என்பவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 58 பேர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். இதில் 500-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது ஓரு மோசமான வெறிச்செயல் என்பதில் ஐயமில்லை. இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர பிரார்த்திக்கின்றோம். இது ஒரு தனிநபரின் வெறித்தனமான செயலா? அல்லது இதற்கு வேறு பின்னனியா? என்பது குறித்து புலனாய்வு செய்யப்பட வேண்டும். இத்துயர சம்பவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அமெரிக்க மக்களுக்கு எமது ஆறுதலை தெரிவித்துக்கொள்கி்றோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 03-10-2017
சிறப்பாக நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்ட மஜக நிர்வாக கூட்டம்…!
குடந்தை.அக்.03., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக் கூட்டம் நேற்று மாலை கும்பகோணம் அனஸ் ரெஸ்டாரண்டில் இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராசுதீன், மாநில வர்த்தக அணி செயளாலர் நாட்டாமை யூசுப் ராஜா, தலைமை கழக பேச்சாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப் ஆகியோர் உடன் இருந்தனர். மாவட்ட நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமான முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, அணி, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் பதிவு செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_வடக்கு_மாவட்டம் 02.10.17
வேலூர் (கி) மாவட்டம் சைதாப்பேட்டை 31-வது வார்டு (மேற்கு) கிளை மறுசீரமைப்பு..!
வேலூர்.செப்.30., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) வேலூர் கிழக்கு மாவட்டம் சைதாப்பேட்டை 31-வது வார்டு (மேற்கு) கிளை நேற்று மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மஜக வேலூர் மாநகரம் 31-வது வார்டு (மேற்கு) கிளை பொதுக்குழு நேற்று 29.09.2017 இரவு 9 மணியளவில் கிளை செயலாளர் சையத் ரபி இல்லத்தில் மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர் முஹம்மத் ஜாபர் தலைமையில், மாவட்ட அமைப்புக்குழு பொருப்பாளர்கள் முஹம்மத் யாசீன், சையத் உசேன், முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் கீழ்காணும் நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்... 1) கிளை செயலாளர்: N.சையத் ரபி 9943011203 2) கிளை பொருளாளர்: R.A.இம்ரான் 9092403783 3) துணை செயலாளர்: S.சல்மான் ஷரீப் 9042003783 4) துணை செயலாளர்கள்: S.முஸம்மில் 8098888960 A.இனாமுல் ஹசன் 9600209350 5) இளைஞரணி செயலாளர்: R.அப்பாஸ் கான் 9003855184 6) மருத்துவ சேவை அணி செயலாளர்: C.இஸ்மாயில் ஷரீப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 30.09.17