கோவை.டிச.22., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நேற்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA. பைசல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 21.12.17
Author: admin
மீனவ பெண்கள் நடத்தும் “சினேகா” நிறுவன நிகழ்ச்சியில்… நாகை MLA பங்கேற்பு!
நாகை.டிச.21., நாகப்பட்டினம் தொகுதியில் இன்று "சினேகா" என்ற தொண்டு நிறுவனத்தின் சமூக விழாவில் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். இந்த அமைப்பு நாகை, காரைக்கால் பகுதி மீனவர்களுக்கு மத்தியில் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு வாழ்நிலை, அரசு திட்டங்களை பெற்றுக் கொடுத்தல் என பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது. இன்று நாகப்பட்டினத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற M .தமிமுன் அன்சாரி MLA அவர்கள், "சினேகா" தொண்டு நிறுவனத்தில் பணிகளை பாராட்டி பேசினார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 21.12.17
மஜக வட சென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..
சென்னை.டிச.21., மனிதநேய ஜனநாயக கட்சி வட சென்னை மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (20/12/17) மாலையில் மாநில செயலாளர் என்.ஏ.தைமியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் அதிகமான கிளைகள் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் M.அன்வர், மாவட்ட பொருளாளர் A.முஹம்மது அக்பர், மாவட்ட துணை செயலாளர்கள் A.அப்துல் ரசாக் , C.அம்ஜத் உசேன் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் A.ஜகுபர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர் . தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வட_சென்னை_மேற்கு_மாவட்டம்
மஜக பொள்ளாச்சி நகர செயல்வீரர்கள் கூட்டம்..!
கோவை.டிச.21., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர செயல்வீரர்கள் கூட்டம் நகர செயலாளர் ராஜா ஜெமீஷா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் TA.நாசர், மாநில இளைஞரணி துணை செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆனைமலை காஜா, மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், KA.பாருக், KU.முஸ்தபா, மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ABS.அப்பாஸ், மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹிம், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அன்வர், துணைசெயலாளர் முகபுல்கரீம், சுற்றுச் சூழல் அணி மாவட்ட துணைசெயலாளர் அபு, மருத்துவ அணி மாவட்ட துணைசெயலாளர் காதர்மீரான் மற்றும் பொள்ளாச்சி நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 1) வருகின்ற ஜனவரி 26, குடியரசு தினத்தன்று மாபெரும் மருத்துவ முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. 2) ஜனவரி 28, அன்று பொள்ளாச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தகவல். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 21.12.17
நீட் எதிர்ப்பு போராட்ட வழக்கு..! நீதிமன்றத்தில் விசாரனைக்கு ஆஜரான மாணவர் இந்தியா நிர்வாகிகள்..!!
சென்னை.டிச.20., மாணவர் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்தவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் மீது காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரனைக்காக இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணைச் செயலாளர் பஷீர் அஹமது, ஊடக பிரிவைச் சேர்ந்த கார்த்திக் ஆகியோர்ஆஜராகினர். விசாரனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்திப்பு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் கோபி மற்றும் பிரசாத் உடன் இருந்தனர். செய்தி; #ஊடக_பிரிவு #மாணவர்_இந்தியா