சென்னை.மார்ச்.20., இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்ப்பு கொண்டு வந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தையே சீர்குலைத்திருக்கிறது போப் ஆண்டவர் இருக்கும் வாடிகன் தேவாலயம், புனித மெக்கா, திருப்பதி கோயில் ஆகியவற்றிலெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்து பின்பற்றப்படுகிறது. முன் எச்சரிக்கையாக ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி விட்டு அமர வேண்டும் என சொல்லும் போது, நாமும், அதை பின்பற்றும் வகையில் நமது சட்டமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைப்பதோடு, டாஸ்மாக் கடைகளையும் மூடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார் தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 20-03-2020
Author: admin
மஜக மத்திய சென்னைகிழக்கு மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு பரப்புரை..!
சென்னை.மார்ச்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொரோனா குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக புதுப்பேட்டை, சேப்பாக்கம், மவுண்ட் ரோடு, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் துண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. பிரச்சாரத்தில் மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 20-03-2020
ஹஜ் இல்லம் கட்ட ஏற்பாடு ஹஜ் கமிட்டிஆலோசனை கூட்டத்தில் முடிவு..!
சமீபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் ஹஜ் புனித பயணிகளுக்கு தமிழக அரசு சார்பாக 15 கோடி ரூபாய் மதிப்பிட்டில் ஹஜ் இல்லம் ஒன்றை கட்ட அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் அது தொடர்பாக ஹஜ் கமிட்டி ஆலோசனை கூட்டம் கமிட்டியின் தலைவர் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிலோபர் கபில், மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர், கூட்டத்தில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் சென்னை விமான நிலையத்திற்கு அருகில் புதிய ஹஜ் இல்லம் அமைப்பது என்றும், அதில் திருமண மண்டபம், மாநாட்டு அரங்கம், தங்கும் அறைகள் என்று பன்நோக்கு கட்டிடமாக அமைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. https://m.facebook.com/story.php?story_fbid=2343151569117938&id=700424783390633
மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக, 1) அ.முஹம்மது மஃரூப் த/பெ; அ.அப்துல் காதர் 2/207 வடக்குத்தெரு பண்டாரவாடை-614204 தஞ்சாவூர் மாவட்டம் அலைபேசி-9894549992 2) S. ருபிஹர் அலி, த/பெ; P. சலாவுதீன், 1/78, மைதீன்புரம், மாதவலாயம் - 629302 கன்னியாகுமரி மாவட்டம் ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டு கொள்கிறேன். இவண். மு.தமிமுன்அன்சாரி MLA #பொதுச்செயலாளர் #மனிதநேயஜனநாயககட்சி 19-03-2020
தமிழகத்தை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மாணவர்களும் ஈரான் மீனவர்களும் மீட்கப் படுவார்களா.? கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்ட சபையில் முதமி முன் அன்சாரி MLA கேள்வி.!
இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், விதி 55-ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை பாதித்தது போல் ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் பாதித்திருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் மலேசியா எல்லை மூடப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ்க்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் நேரடி விமான சேவை இல்லாததால் நாடு திரும்பும் வழியில், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிப்பதாக சமூக இணையதளங்கள் வழியாக அறிகிறோம். அவர்களுக்கு அங்கு விமான நிலையத்தில் தங்க பாதுகாப்பான ஏற்பாடுகளை நமது இந்திய வெளியுறவுத்துறை செய்திருக்கிறதா? இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி இருக்கிறதா? என்பதை அறிய விரும்புகிறேன். அதுபோல் நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டு கடல் எல்லையில் சிக்கித் தவிப்பதாக அறிகிறோம். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?அவர்கள் குடும்பத்தினருக்கு உரிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதையும் தங்கள் வாயிலாக அரசிடம் கேட்டு அமர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதே கேள்வியையொட்டி பேசிய உறுப்பினர்கள்