ஹஜ் இல்லம் கட்ட ஏற்பாடு ஹஜ் கமிட்டிஆலோசனை கூட்டத்தில் முடிவு..!

சமீபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் ஹஜ் புனித பயணிகளுக்கு தமிழக அரசு சார்பாக 15 கோடி ரூபாய் மதிப்பிட்டில் ஹஜ் இல்லம் ஒன்றை கட்ட அறிவிப்பு செய்திருந்தார்.

இந்நிலையில் அது தொடர்பாக ஹஜ் கமிட்டி ஆலோசனை கூட்டம் கமிட்டியின் தலைவர் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிலோபர் கபில், மு.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்டோர் பங்கேற்றனர்,

கூட்டத்தில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் சென்னை விமான நிலையத்திற்கு அருகில் புதிய ஹஜ் இல்லம் அமைப்பது என்றும், அதில் திருமண மண்டபம், மாநாட்டு அரங்கம், தங்கும் அறைகள் என்று பன்நோக்கு கட்டிடமாக அமைப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=2343151569117938&id=700424783390633